யூடியூபர் சவுக்கு சங்கருக்கு ஜாமீன்..!! கோவை குற்றவியல் நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
சவுக்கு சங்கர் மீது பதியப்பட்ட வழக்கில் கோவை 3-வது குற்றவியல் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசியதாக யூடியூபர் சவுக்கு சங்கர் கோவை போலீசாரால் கைது செய்யப்பட்டார். பின்னர், இதே குற்றச்சாட்டிற்காக கன்னியாகுமரி, திண்டுக்கல், நீலகிரி உள்ளிட்ட 16 காவல் நிலையங்களில் சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த 17 வழக்குகளையும் ஒன்றாக விசாரிக்கவும், ஒவ்வொரு வழக்கிற்காக ஒவ்வொரு ஊராக தன்னை அழைத்துச் செல்வதால், இந்த வழக்குகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் அவர் மனுதாக்கல் செய்திருந்தார்.
இதற்கிடையே, உச்சநீதிமன்றம் அந்த வழக்குகளையும் விசாரிக்க இடைக்கால தடை விதித்தது. மேலும், அவர் மீது பதியப்பட்டிருந்த குண்டர் சட்டத்தை நீக்க மனு தாக்கல் செய்யவும் அவருக்கு அனுமதி வழங்கியது. இதற்கிடையே, முத்துராமலிங்க தேவர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், சவுக்கு சங்கர் கோவை போலீசாரால் கடந்த ஆகஸ்ட் 3ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் ஜாமீன் வழங்கக் கோரி சவுக்கு சங்கர் தரப்பினர் கோவை 3-வது குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சரவண பாபு, சவுக்கு சங்கருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார். இருப்பினும், சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு குண்டர் சட்டம் இருப்பதால், அவர் சிறையிலேயே இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More : ஒரே நாளில் ’தங்கலான்’ திரைப்படம் வசூலித்தது எவ்வளவு தெரியுமா..? தமிழ்நாட்டில் மட்டுமே இத்தனை கோடியா..?