மீண்டும் தமிழகத்தை நோக்கி..!! 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி..!! இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!!
தெற்கு அந்தமான் கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது, அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் இது மேற்கு - வட மேற்கு திசையில் தமிழகத்தை நோக்கி நகரும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதன் காரணமாக வரும் 16ஆம் தேதி முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
இந்நிலையில் தமிழ்நாட்டில் அடுத்த 2 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகரில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.