For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

அடுத்தடுத்து நிகழும் பூகம்பங்கள்!… ஆப்கானிஸ்தானில் அரை மணிநேரத்தில் 2 முறை நிலநடுக்கம்!… அச்சத்தில் மக்கள்!

06:35 AM Jan 03, 2024 IST | 1newsnationuser3
அடுத்தடுத்து நிகழும் பூகம்பங்கள் … ஆப்கானிஸ்தானில் அரை மணிநேரத்தில் 2 முறை நிலநடுக்கம் … அச்சத்தில் மக்கள்
Advertisement

ஆப்கானிஸ்தானில் அரை மணி நேரத்திற்குள் அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

Advertisement

2024ம் ஆண்டு தொடக்கம் முதலே உலகின் பல்வேறு இடங்களில் பூகம்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. அந்தவகையில் ஜப்பானில் கடந்த 1ம் தேதி ஏற்பட்ட அதிசக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.6 ஆக பதிவானது. இதையடுத்து, சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. இந்தநிலநடுக்கத்தால் இதுவரை 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜப்பானை தொடர்ந்து வட மற்றும் தென்கொரியா, ரஷ்யா, தஜிகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளிலும் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டது. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சமடைந்தனர்.ஆங்காங்கே வீடுகள் இடிந்து பெரும் சேதமும் ஏற்பட்டது.

இந்தநிலையில், ஆப்கானிஸ்தானின் பைசாபாத்தில் (புதன்கிழமை) அதிகாலையில் அடுத்தடுத்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் (என்சிஎஸ்) தெரிவித்துள்ளது. முதல் நிலநடுக்கம் 80 கிமீ ஆழத்தில், ஃபைசபாத்தில் இருந்து 126 கிமீ தொலைவில் ஏற்பட்டதாகவும், இது ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவாகியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதேபோல், இரண்டாவது நிலநடுக்கம், ஃபைசாபாத்தில் 100 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டதாகவும், இது ரிக்டர் அளவில் 4.8 ஆக பதிவாகியுள்ளதாகவும், மேலும், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை என்றும் நில அதிர்வுக்கான தேசிய மையம் (என்சிஎஸ்) தெரிவித்துள்ளது.

Tags :
Advertisement