முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

வயிற்றில் குழந்தை..!! தூங்கிக் கொண்டிருந்த 6 வயது சிறுமியை மூச்சுத்திணற வைத்து கொலை செய்த சித்தி..!!

The autopsy report revealed that the girl died of suffocation.
10:43 AM Dec 21, 2024 IST | Chella
Advertisement

கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே கோதமங்கலத்தைச் சேர்ந்தவர் அஜாஸ் கான். இவருக்கு வயது 38 ஆகிறது. இவரது முதல் மனைவியுடனான திருமணம் விவாகரத்தான நிலையில், முதல் மனைவிக்கு பிறந்த மகள் முஸ்கானா (வயது 6) உடன் தனியாக வசித்து வந்தார் அஜாஸ் கான். இந்நிலையில், அனிஷா (26) என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 2 வயதில் குழந்தை உள்ளது.

Advertisement

இந்நிலையில், அனிஷா மீண்டும் கர்ப்பமாகியுள்ளார். இதற்கிடையே, அஜாஸ்கான் வழக்கம் போல் வேலைக்கு சென்ற நிலையில், சிறிது நேரத்தில் அஜாஸ் கானை செல்போனில் தொடர்பு கொண்ட அனிஷா, சிறுமி முஸ்கானா வீட்டில் மயங்கிக் கிடப்பதாகக் கூறியுள்ளார். இதையடுத்து, பதறியடித்துக் கொண்டு வீட்டிற்கு வந்த அஜாஸ் கான், சிறுமியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே மருத்துவமனைக்கு விரைந்து சென்ற போலீசார், சிறுமி முஸ்கானாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் அறிக்கையில், சிறுமி மூச்சுத்திணறி உயிரிழந்தது தெரியவந்தது.

இதையடுத்து அஜாஸ்கான் மற்றும் அனிஷாவிடம் போலீசார் தனித்தனியே விசாரணை நடத்தினர். அப்போது தூங்கிக் கொண்டிருந்த முஸ்கானாவை அனிஷா தலையணையால் முகத்தை அழுத்தி மூச்சுத்திணற வைத்து கொலை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து, சித்தி அனிஷாவை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இந்த கொலை வழக்கில் அஜாஸ் கானுக்கு தொடர்பு உள்ளதா? கொலைக்கான காரணம் குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More : 1999 கார்கில் போர்..!! பதுங்கு குழி தோண்டிய பாகிஸ்தான்..!! இந்திய ராணுவத்தையே உஷாராக்கிய டஷி நம்க்யால் காலமானார்..!!

Tags :
கேரள மாநிலம்கொலை வழக்குசிறுமி கொலை
Advertisement
Next Article