25 விரல்களுடன் பிறந்த ஆண் குழந்தை..!! கர்நாடகாவில் நடந்த ஆச்சரியம்!!
பெரும்பாலும், விசித்திரமான திறன்களுடன் பிறக்கும் நபர்களைப் பற்றி நாம் கேள்விப்படுகிறோம், ஆனால் மொத்தம் 25 விரல்களுடன் பிறந்த குழந்தையைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அந்த ஆச்சரியம் தான் தெலுங்கானாவில் நடந்துள்ளது.
கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை மாவட்டத்தில் உள்ள கொன்னூரை சேர்ந்தவர் பாரதி (35). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு அழகான குழந்தை இன்று பிறந்தது. உடல் ஆரோக்கியத்துடன் பிறந்த அந்த குழந்தையின் கை மற்றும் கால் விரல்களின் எண்ணிக்கை கூடுதலாக இருந்தது. அதாவது வலது கையில் 6 விரல்களும், இடது கையில் 7 விரல்களும், இரு கால்களிலும் தலா 6 விரல்களும் இருந்துள்ளன. இதனால் மொத்தம் 25 விரல்களுடன் அந்த அதிசய குழந்தை பிறந்துள்ளது. இதை பார்த்து மருத்துவர்களும், குழந்தையின் குடும்பத்தினரும் ஆச்சரியமடைந்தனர்.
இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், “பாரதியின் குழந்தைக்கு 25 விரல்கள் உள்ளன. மற்றபடி குழந்தையின் உடல் ஆரோக்கியமாக இருக்கிறது. விரல்களின் எண்ணிக்கை கூடுதலாக இருப்பதால் பயப்பட தேவையில்லை” என்று தெரிவித்தனர். மேலும், குழந்தை மற்றும் அவரது 35 வயதான தாயார் பாரதி இருவரும் பூரண நலமாக இருப்பதாகவும், நலமுடன் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, செய்தியாளர்களிடம் பேசிய குழந்தையின் தந்தை குரப்பா கோனூர், தெய்வத்தின் ஆசீர்வாதமாக கருதும் புதிய பையனின் வருகையால் தங்கள் முழு குடும்பமும் மிகவும் மகிழ்ச்சியடைவதாக கூறினார். குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கிராம தெய்வமான புவனேஸ்வரி தேவியின் பக்தர்கள் என்றும், அவரது ஆசியால் தங்கள் வீட்டில் இதுபோன்ற அபூர்வ குழந்தை பிறந்துள்ளதாக அவர்கள் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும், அரியவகை 25 விரல்களுடன் பிறந்த குழந்தையைப் பார்க்க ஏராளமானோர் வந்து செல்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.
Read more ; இந்திய எல்லையில் ஊடுரூவிய பாகிஸ்தான் தீவிரவாதிகள்..!! பின்னணி என்ன?