For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பி.எட் மாணவர் சேர்க்கை விண்ணப்பம் இன்று முதல் தொடக்கம்...! ரூ.500 கட்டணம் செலுத்த வேண்டும்...!

B.Ed first year admission application is going to start from today
07:20 AM Sep 16, 2024 IST | Vignesh
பி எட் மாணவர் சேர்க்கை விண்ணப்பம் இன்று முதல் தொடக்கம்     ரூ 500 கட்டணம் செலுத்த வேண்டும்
Advertisement

பி.எட் முதலாமாண்டு மாணவர் சேர்க்கை விண்ணப்பம் இன்று முதல் தொடங்க உள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில்; தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் இளநிலை கல்வியியல் பட்டப்படிப்பு(B.Ed) முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான (2024-2025) விண்ணப்பங்களை www.tngasa.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்யலாம். விண்ணப்பம் பதிவு செய்ய விண்ணப்பக் கட்டணமாக ரூ.500 செலுத்தப்பட வேண்டும். SC/ST விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப கட்டணம் ரூ.250 மட்டும் செலுத்தினால் போதுமானது.

Advertisement

மாணாக்கர்கள் விண்ணப்பிக்கும்போது தங்களது விருப்ப வரிசைப்படி கல்லூரிகளை தெரிவு செய்தல் வேண்டும். இது தொடர்பான கூடுதல் விவரங்கள் மற்றும் எந்தெந்த கல்லூரிகளில் என்னென்ன பாடப்பிரிவுகள், சேர்க்கை எண்ணிக்கை போன்ற விவரங்கள் www.tngasa.in என்ற இணையதள முகவரியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பக் கட்டணத்தை விண்ணப்பதாரர்கள் Debit Card, Credit Card, Net Banking மூலம் இணையதள வாயிலாக செலுத்தலாம்.

இணையதள வாயிலாக கட்டணம் செலுத்த இயலாத மாணவர்கள் கல்லூரி சேர்க்கை உதவி மையங்களில் "The Director, Directorate of Collegiate Education, Chennai -15" என்ற பெயரில் 16.09.2024 அன்று அல்லது அதற்குப் பின்னர் பெற்ற வங்கி வரைவோலை மூலமாகவும் அல்லது நேரடியாகவும் செலுத்தலாம். மாணவர் சேர்க்கை வழிகாட்டி மற்றும் கால அட்டவணையை மாணவர்கள் மேற்குறித்த இணையதளம் வாயிலாக அறிந்து கொள்ளலாம். அக்டோபர் 25ஆம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகும்.

Tags :
Advertisement