முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

ரஷ்யாவின் சதி!. ஏவுகணை தாக்குதலால் அஜர்பைஜான் விமானம் விபத்து!. வெளியான அதிர்ச்சி தகவல்!

05:40 AM Dec 27, 2024 IST | Kokila
Advertisement

Azerbaijan plane: கஜகஸ்தானில், பறவை மோதியதால் விபத்துக்குள்ளான அஜர்பைஜான் விமானம், ரஷ்யாவின் ஏவுகணையால் தாக்கப்பட்டு இருக்கலாம் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Advertisement

ஐரோப்பிய நாடான அஜர்பைஜான் தலைநகர் பாகுவில் இருந்து, ரஷ்யாவின் க்ரோஸ்னி நகருக்கு, அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின், 'எம்ப்ரேயர் - 190' ரக பயணியர் விமானம் நேற்று புறப்பட்டது. இந்த விமானத்தில், 62 பயணியர், இரு விமானியர், மூன்று விமான ஊழியர்கள் என, மொத்தம் 67 பேர் இருந்தனர். கஜகஸ்தானின் வான் பரப்பில் பறந்த இந்த விமானம், அந்நாட்டின் அக்டாவ் நகரில் கீழே விழுந்து வெடித்து சிதறி விபத்துக்கு உள்ளானது. இதில் விமானம் இரு பாகங்களாக உடைந்தது. இந்த விபத்தில், இரு விமானியர் உட்பட 38 பேர் உயிரிழந்தனர். அதிர்ஷ்டவசமாக 29 பயணியர் உயிர் பிழைத்தனர். விமானம் விபத்துக்குள்ளாகி வெடித்து சிதறிய காட்சி, சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

இது தொடர்பாக விசாரணை நடந்து வரும் நிலையில், விமான போக்குவரத்து நிபுணர்கள் அமெரிக்கா, ஐரோப்பிய மற்றும் சர்வதேச செய்தி ஊடகத்திற்கு பேட்டி அளித்து உள்ளனர்.அதில், விமானத்தின் எரிபொருள் பாகத்தில் உள்ள துவாரம் மற்றும் இறக்கையில் உள்ள பாதிப்புகள் ஆகியவற்றை வைத்து பார்க்கும்போது, ஏவுகணை தாக்கியது போல் உள்ளதாக கூறியுள்ளனர்.

உக்ரைன் டுரோன் பறக்கும் பகுதியில் இந்த விமானம் பறந்து கொண்டிருந்த போது நொறுங்கியது எனவும் கூறியுள்ளனர். ரஷ்ய ராணுவம் குறித்து ஆராய்ச்சி கட்டுரை எழுதும் யூரி போடோல்யகா சர்வதேச ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், ஏவுகணை தடுப்பு அமைப்பினால் ஏற்பட்ட சேதம் போல், விமானத்தின் பாகங்கள் காணப்படுகிறது. இதனால், ஏவுகணை எதிர்ப்பு ஏவுகணையால், விமானம் தவறுதலாக தாக்கப்பட்டு இருக்கலாம் எனக்கூறியுள்ளனர்.

இன்னும் சிலர், விபத்துக்குள்ளான விமானத்தின் உதிரி பாகங்கள் மற்றும் அப்பகுதியில் வான் பாதுகாப்பு சூழ்நிலை ஆகியவற்றை வைத்து பார்க்கும்போது, இந்த விமானம் சில ஏவுகணையால் தாக்கப்பட்டதற்கான வாய்ப்பு உள்ளது என்றனர். இதனையே இன்னும் சிலர் கூறுகின்றனர்.

இதனிடையே, இந்த விமானம் விபத்துக்குள்ளாவதற்கு முன்பாக பறவைக் கூட்டத்தின் மீது மோதியதாக ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன. இந்த தகவல் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. விபத்துக்கான காரணத்தை அறிய அஜர்பைஜான் மற்றும் கஜகஸ்தான் ஆகிய இரு நாடுகளும் விசாரணையை முடுக்கி விட்டு உள்ளன.

Readmore: சரக்கு அடித்தப் பின் இந்த உணவுகளை மட்டும் சாப்பிடாதீங்க..!! என்னென்ன பிரச்சனைகள் வரும் தெரியுமா..?

Tags :
38 people killedAzerbaijan plane crashesRussian missile attack
Advertisement
Next Article