For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

கஜகஸ்தானில் விபத்துக்குள்ளான அஜர்பைஜான் விமானம் : இதுவரை 42 பேர் பலி..!!

Azerbaijan Airlines plane crashes in Kazakhstan; over 30 dead, 28 survivors hospitalised
03:31 PM Dec 25, 2024 IST | Mari Thangam
கஜகஸ்தானில் விபத்துக்குள்ளான அஜர்பைஜான் விமானம்   இதுவரை 42 பேர் பலி
Advertisement

கஜகஸ்தானின் அக்டாவ் விமானநிலைத்தில் 72 பயணிகளுடன் அவசரமாக தரையிறங்க முயன்ற அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். விபத்துக்குள்ளான அஜர்பைஜான் விமானம் ஜெ2-8243 பாகுவில் இருந்து ரஷ்யாவின் க்ரோஸ்னிக்கு சென்று கொண்டிருந்தது. க்ரோஸ்னியில் நிலவிய மோசமான வானிலை காரணமாக விமானம் திருப்பி விடப்பட்டது. அந்த விமானம் கஜகஸ்தானின் அகடாவ் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கிய போது விபத்துக்குள்ளானது.

Advertisement

 இந்த விபத்தில் 42 பேர் உயிரிழந்ததாக கஜகஸ்தான் அவசர அமைச்சகம் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அஜர்பைஜான் ஏர்லைன்ஸால் இயக்கப்படும் எம்பரர் 190 விமானம், பாகு - க்ரோனி வழித்தடத்தில் அக்டாவ் நகருக்கு அருகே மூன்று கிலோ மீட்டருக்கு முன்பு அவசரமாக தரையிறக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பான கூடுதல் தகவல்கள் பொதுமக்களுக்கு வழங்கப்படும்" என்று தெரிவித்துள்ளது. தொழில்நுட்ப கோளாறு போன்ற எந்த காரணத்தால் விமானம் விபத்துக்குள்ளானது என்று பல்வேறு கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

https://twitter.com/i/status/1871815433021702451

Read more ; இந்த 5 பொருட்கள் வீட்டில் இருந்தால் போதும்..!! கல்லீரலை ஈசியாக சுத்தம் செய்யலாம்..!!

Tags :
Advertisement