முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

ஐயப்ப பக்தர்களே!. இயற்கை மரணம் அடையும் பக்தர்கள் குடும்பத்துக்கு நிதி உதவி!. தேவசம்போர்டு அறிவிப்பு!

05:40 AM Dec 18, 2024 IST | Kokila
Advertisement

Sabarimala: சபரிமலை பயணத்தின் போது இயற்கையாக மரணம் அடைபவர்களுக்கு அடுத்த ஆண்டு முதல் உதவித்தொகை வழங்குவதற்கு புதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்று திருவிதாங்கூர் தேவஸ்தம்போடு தலைவர் பி.எஸ்.பிரசாந்த் கூறியுள்ளார்.

Advertisement

சபரிமலை வரும் வாகனங்களில் விபத்து ஏற்பட்டு பக்தர்கள் மரணமடையும் நிலை ஏற்பட்டால் அவர்களுக்கு இன்சூரன்ஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் இயற்கையாக மரணம் அடைபவர்களுக்கு இன்சூரன்ஸ் இழப்பீடு வழங்க வாய்ப்பில்லை. எனினும் அந்த பக்தர்களுக்கு உதவுவதற்கு திருவிதாங்கூர் தேவசம்போர்டு முடிவு செய்துள்ளது. அடுத்த ஆண்டு முன்பதிவு செய்யும்போது பத்து ரூபாய் பக்தர்களிடமிருந்து வசூலிக்கப்படும். அதை வைத்து இயற்கையாக மரணமடையும் பக்தர்களின் குடும்பத்துக்கு நிதி உதவி வழங்கப்படும்.

ஒரு சீசனில் 60 லட்சம் பேர் முன்பதிவு செய்யும்போது பத்து ரூபாய் வீதம் அவர்கள் செலுத்தினால் ஆறு கோடி ரூபாய் தேவசம் போர்டுக்கு கிடைக்கும். இது சபரிமலைக்கு பக்தர்கள் செய்யும் பேருதவியாக அமையும். 2023 - 24 சீசனில் 48 பேர் இறந்தனர். இந்த சீசனில் தற்போது வரை 19 பேர் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Readmore: கருப்பு கலர் கோட்..! மாஸ் லுக்கில் அஜித்…! வெளியான அடுத்த அப்டேட் ..!

Tags :
Ayyappa devoteesDevasomboarddie naturallyfinancial assistanceSabarimala
Advertisement
Next Article