5 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் ஆயுஷ்மான் பாரத் கணக்கு...! மத்திய அரசு வெளியிட்ட விவரம்...!
ஆயுஸ்மான் பவ பிரச்சாரத்தில், 5 கோடிக்கும் மேற்பட்ட ஆயுஷ்மான் பாரத் கணக்குகள் தொடங்கப்பட்டதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு; நடந்து வரும் ஆயுஷ்மான் பவ பிரச்சாரத்தின் போது 5 கோடிக்கும் அதிகமான ஆயுஷ்மான் பாரத் சுகாதார கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும், மொத்தம் 4,44,92,564 ஆயுஷ்மான் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதுடன், 1,15,923 ஆயுஷ்மான் முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது 28.12.2023 வரையிலான தரவுகளாகும்.
இந்த இயக்கத்தின் கீழ் 28.12.2023 வரை 13,84,309 சுகாதார முகாம்கள் நடத்தப்பட்டு இவற்றில் 11,30,98,010 பேர் பயனடைந்துள்ளனர். சுகாதார முகாம்கள் மற்றும் சுகாதார திருவிழாக்களில் ஆரோக்கியம், யோகா, தியானம், தொலை மருத்துவ ஆலோசனைகள் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படுகின்றன. 29,83,565 தாய்மார்களுக்கு பரிசோதனை மற்றும் நோய்த்தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன.
சமூக சுகாதார மைய திருவிழக்களின் கீழ், 1,10,05,931 நோயாளிகள் பொது வெளிநோயாளிகள் பிரிவில் சிகிச்சை அல்லது ஆலோசனைகள் பெற்று பயனடைந்துள்ளனர். 49,67,675 நோயாளிகள் சிறப்பு வெளிநோயாளிகள் பிரிவில் பயனடைந்துள்ளனர். 38,309 பெரிய அறுவை சிகிச்சைகள் மற்றும் 1,30,70,70 சிறிய அறுவை சிகிச்சைகள் நடத்தப்பட்டுள்ளன. இந்தத் தரவுகள் அனைத்தும் 28.12.2023 வரையிலானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.