உடல் இடையை கடகடவென குறைக்க, இது தான் சிறந்த வழி... ஆயுர்வேத குறிப்பு!!!
பூண்டு மற்றும் தேனில் உள்ள மருத்துவ குணங்கள் பல நோய்களை குணப்படுத்த உதவுகிறது. இதனால் தான் ஆயுர்வேதத்தில் தேன் மற்றும் பூண்டு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. பூண்டில், பாக்டீரியா எதிர்ப்பு, ஆன்டிவைரல் பண்புகளுக்கு பொறுப்பான அல்லிசின் என்ற தனிமம் காணப்படுகிறது. இது மட்டும் இல்லாமல், வைட்டமின் சி, வைட்டமின் பி-6, மாங்கனீஸ், செலினியம், கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ் மற்றும் நார்ச்சத்துக்கள் உள்ளது. பூண்டில் இத்தனை நன்மைகள் இர்தாலும், இதனை தேனுடன் சேர்த்து சாப்பிடும்போது அதன் ஆரோக்கிய நன்மைகள் அதிகரிக்கும்
ஆம், பூண்டு மற்றும் தேனை வெறும் வயிற்றில் சாப்பிடுவதால், வளர்சிதை மாற்றம் அதிகரித்து உடல் எடை கடகடவென குறையும். உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை வேகமாக எரிக்க இது ஒரு நல்ல தீர்வு. கொலஸ்ட்ராலை குறைக்க உதவுவது மட்டும் இல்லாமல், உயர் ரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்தும். மேலும், காலை வெறும் வயிற்றில் பூண்டு மற்றும் தேன் சாப்பிடுவதால் நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த, காலை வெறும் வயிற்றில் பூண்டு மற்றும் தேன் சாப்பிடுவது நல்லது.
பூண்டை தேனில் ஊறவைத்து சாப்பிடுவதால், செரிமான பிரச்சனை இருக்காது. தொடர்ந்து தேனில் ஊறவைத்த பூண்டை சாப்பிடுவதால், வயிற்று வலி, வாயு, மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும். தேனுடன் பூண்டை சேர்த்து சாப்பிட, முதலில் பூண்டு பற்கள் சிலவற்றை, தேன் நிரப்பிய ஜாடி ஒன்றில் ஊறப்போட வேண்டும். சில நாட்கள் அதை எடுக்காமல் அப்படியே விட்டுவிட வேண்டும். சிறிது நாட்களுக்கு பிறகு, தேனில் நன்றாக ஊறிய பூண்டை எடுத்து சாப்பிடலாம். தேனில் ஊறிய பூண்டை, காலை வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் அதிக பலன் கிடைக்கும்.
Read more: நறுக்கி வைத்த வெங்காயத்தை மறுநாள் சமையலுக்கு பயன்படுத்துறீங்களா..? – மருத்துவர்கள் எச்சரிக்கை