ஆயுத பூஜை தொடர் விடுமுறை..!! முக்கிய வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கம்..!! தெற்கு ரயில்வே அறிவிப்பு..!!
ஆயுதபூஜை, விஜயதசமி ஆகிய பண்டிகைகால விடுமுறையை முன்னிட்டு 10 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அக்டோபர் 11, 12 ஆகிய தேதிகளில் ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்த நாட்களைத் தொடர்ந்து, அக்.13ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் 3 நாட்களும் தொடர் விடுமுறையாக உள்ளது. எனவே, வெளியூர்களில் வசிப்பவர்கள் ஆயுத பூஜையை கொண்டாட சொந்த ஊர் திரும்புவார்கள் என்பதால் பேருந்துகள், ரயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதும்.
இந்நிலையில் ஆயுத பூஜையை முன்னிட்டு, சென்னை எழும்பூர் - நாகர்கோவில் இடையே நாளை (அக். 10) மற்றும் அக்டோபர் 12 தேதிகளிலும், மறுமார்க்கத்தில் நாகர்கோவில் - சென்னை எழும்பூர் இடையே நாளை மறுநாள் (அக். 11) மற்றும் அக். 13ஆம் தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அதேபோல், நாளை மற்றும் அக். 12ஆம் தேதிகளில் சென்னை சென்ட்ரல் - கோட்டயம் (கேரளா) இடையே மற்றும் மறு மார்க்கத்தில் கோட்டயம் (கேரளா) - சென்னை சென்ட்ரல் இடையே அக். 11 மற்றும் அக். 13 ஆகிய தேதிகளிலும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. எர்ணாகுளம் - மங்களூர் இடையே நாளையும் (அக். 10), மறுமார்க்கத்தில் மங்களூர் - எர்ணாகுளம் இடையே அக். 1ஆம் தேதியும் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Read More : மகளிர் சுய உதவி குழுக்களுக்கு பண மழை கொட்டப் போகுது..!! துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் மெகா பிளான்..!!