For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

10,000 சிசிடிவி கேமராக்கள்..!கண்காணிப்பு வளையத்தில் அயோத்தி!…

07:30 AM Jan 13, 2024 IST | 1newsnationuser3
10 000 சிசிடிவி கேமராக்கள்   கண்காணிப்பு வளையத்தில் அயோத்தி …
Advertisement

மிக பிரமாண்ட ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு அயோத்தி மாவட்டம் முழுவதும் 10,000 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

உலகமே எதிர்பார்த்து காத்திருக்கும் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 22ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது. இதற்காக பல்வேறு சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கும்பாபிஷேகத்தையொட்டி, அயோத்தி முழுவதும் விழா கோலம் பூண்டுள்ளது. எவ்வித அசம்பாவிதங்களும் நடைபெறாத வண்ணம் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில், உத்தரப் பிரதேச காவல்துறை ஆளில்லா விமானங்கள் மற்றும் 10,000 க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களைப் பயன்படுத்த முடிவு செய்துள்ளது. அங்கீகரிக்கப்படாத ட்ரோனைக் கட்டுப்படுத்த ட்ரோன் எதிர்ப்பு அமைப்பு நிறுவப்பட்டுள்ளதாக எஸ்பி செக்யூரிட்டி கவுரவ் வான்ஸ்வால் தெரிவித்தார்.

மேலும், அயோத்தி மாவட்டத்தில் 10,000 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக டிஜி (சட்டம் ஒழுங்கு) பிரசாந்த் குமார் தெரிவித்தார். இது தவிர, காவல்துறைக்கு உதவும் வகையில் நவீன தொழில்நுட்ப உபகரணங்களும் பயன்படுத்தப்படுகின்றன. மேலும், கோவில் நகரத்திற்கு செல்லும் சாலைகள் சுத்தப்படுத்தப்பட்டு வருவதாக டிஜி தெரிவித்தார். ஜனவரி 17 அல்லது 18 முதல் கனரக வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்படுகிறது. அதற்காக அவ்வப்போது போக்குவரத்து அறிவுரைகளும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரெயில் மற்றும் பேருந்து நிலையங்களிலும் கூடுதல் படைகள் நிறுத்தப்பட்டுள்ளன. போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு வருகிறது.

Tags :
Advertisement