For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

அயோத்தி கோவில்!… புதிய சிலையின் முன் வைக்கப்படும் பழைய ராமர் சிலை!

09:20 AM Jan 22, 2024 IST | 1newsnationuser3
அயோத்தி கோவில் … புதிய சிலையின் முன் வைக்கப்படும் பழைய ராமர் சிலை
Advertisement

இதுவரை தற்காலிக கோவிலில் வைக்கப்பட்டுள்ள பழைய ராமர் சிலை, இன்று கும்பாபிஷேகம் செய்யப்படும் புதிய சிலையின் முன் வைக்கப்படும் என ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்திரத்தின் பொருளாளர் கோவிந்த் தேவ் கிரி தெரிவித்தார்.

Advertisement

உலகமே எதிர்பார்த்து காத்திருந்த அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் இன்று வெகு விமரிசையாக கொண்டாடப்படவுள்ளது. இந்தநிலையில், ராமர் கோவிலின் கருவறையில் கடந்த வாரம் 51 அங்குல ராமர் சிலை வைக்கப்பட்டது. மூன்று ராமர் சிலைகள் கட்டப்பட்டு, அதில் இருந்து மைசூரைச் சேர்ந்த சிற்பி அருண் யோகிராஜ் செதுக்கிய குழந்தை ராமர் சிலை கருவறையில் வைத்து கும்பாபிஷேகம் செய்ய தேர்ந்தெடுக்கப்பட்டது.

மற்ற இரண்டு சிலைகளுக்கு என்ன நடக்கும் என்பது குறித்து பேசிய, ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் பொருளாளர் கோவிந்த் தேவ் கிரி, "நாங்கள் அவற்றை மரியாதையுடன் கோவிலில் வைப்போம். ஒரு சிலை எங்களிடம் இருக்கும், ஸ்ரீராமின் உடைகள் மற்றும் ஆபரணங்களை அளக்க எங்களுக்குத் தேவைப்படும் என்பதால் மற்றொரு சிலை எங்களிடம் வைக்கப்படும். மேலும், அசல் ராமர் சிலை பற்றி, கிரி மேலும் கூறியதாவது, "இது புதிய ராமர் சிலை முன்ம்பு அசல் ராமர் சிலை வைக்கப்படும் என்றும் மூல விக்கிரகம் மிகவும் முக்கியமானது. ஐந்து முதல் ஆறு அங்குல உயரம் கொண்ட இதனை 25 முதல் 30 அடி தூரத்தில் இருந்து பார்க்க முடியாது. அதனால் பெரிய சிலை தேவைப்பட்டது என்று கூறினார்.

ராமர் கோவில் கட்டுவதற்கு இதுவரை ரூ. 1,100 கோடிக்கு மேல் செலவழிக்கப்பட்டுள்ளது, முழுமையாக கட்டி முடிக்காததால், இன்னும் 300 கோடி ரூபாய் தேவைப்படும். தற்பொழுது ஒரு மாடி மட்டுமே கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. இன்னும் ஒரு மாடி கட்டப்படவுள்ளது என்று கிரி கூறினார். கருவறையில் வைக்க "மூன்றில் ஒரு சிலையை தேர்ந்தெடுப்பது எங்களுக்கு மிகவும் கடினமாக இருந்தது. அவை அனைத்தும் நாங்கள் வழங்கிய அளவுகோல்களின்படி மிகவும் அழகாக உள்ளன." "முகம் தெய்வீக பிரகாசத்துடன் குழந்தை போல் இருக்க வேண்டும் என்பதே முதல் அளவுகோலாகும். பகவான் ராமர் "அஜான்பாஹு" (முழங்கால்களுக்கு அருகில் கைகளை எட்டும் நபர்) எனவே கைகள் அந்த நீளத்தில் இருக்க வேண்டும்."

கும்பாபிஷேக விழாவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் "தடிமனாகவும் நல்ல ஆளுமை கொண்டவராகவும்" இருந்தார். கைகால்கள் சரியான விகிதத்தில் இருந்தன என்றும் "குழந்தை சிலையின் நுட்பமான தன்மையும் எங்களுக்குத் தெரிந்தது, அதே நேரத்தில் ஆபரணங்களும் மிகவும் அழகாகவும் மென்மையாகவும் பொறிக்கப்பட்டுள்ளன. இது சிலையின் அழகை மேலும் அதிகரித்தது," என்று ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் பொருளாளர் கூறினார்.

500 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியாவில் ஒரு சிறப்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, மேலும் "நாங்கள் அதை தீபாவளியாகப் பார்க்கிறோம்"."நாங்கள் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி கொண்டாடுகிறோம், ஆனால் இது ஒரு வரலாற்று சிறப்பு வாய்ந்தது. இவ்வளவு போராட்டத்திற்குப் பிறகு, ராமர் தனது அசல் இடத்தில் அன்புடனும் மரியாதையுடனும் அமர்ந்திருப்பார். இதுவே நாட்டில் நிலவும் உணர்வு என்று கூறினார்.

Tags :
Advertisement