முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

திருப்பதியை மிஞ்சும் அயோத்தி!… மொத்த உலகின் பார்வையும் இந்தியாவை நோக்கி!… ஆண்டுதோறும் 5 கோடி சுற்றுலா பயணிகளை ஈர்க்கும்!

08:22 PM Jan 23, 2024 IST | 1newsnationuser3
Advertisement

எதிர்காலத்தில் ஆண்டு தோறும் 5 கோடி சுற்றுலா பயணிகளை அயோத்தி ராமர் கோவில் ஈர்க்கும் என்றும் இது பெரிய பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் உலகளாவிய தரகு நிறுவனமான ஜெஃப்ரிஸ் ப்ரோக்கரேஜ் தெரிவித்துள்ளது.

Advertisement

இதுதொடர்பாக ஜெஃப்ரிஸ் ப்ரோக்கரேஜ் தரவுகளின்படி, நாட்டின் மத சுற்றுலா தளங்களின் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இடமாக அயோத்தி மாறும் என்றும் ஆண்டுதோறும் 5 கோடி பக்தர்கள் உள்பட சுற்றுலா பயணிகள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, நாட்டிலே அதிக சுற்றுலா பயணிகள் வரும் புனித தலங்களாக பொற்கோவில் மற்றும் திருப்பதி திகழ்ந்து கொண்டிருக்கிறது. வருங்காலத்தில் அதை அயோத்தி முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அயோத்தியில் உருவாக்கப்பட உள்ள புதிய விமான நிலையம், தற்போது இயங்கி வரும் புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையம் இதை சாத்தியமாக்க உதவும் என்று நம்ப்படுகிறது.

அமிர்தசரஸ் பொற்கோவிலுக்கு ஆண்டுதோறும் 3 முதல் 3.5 கோடி சுற்றுலா பயணிகளும், திருப்பதிக்கு 2.5 கோடி முதல் 3 கோடி சுற்றுலா பயணிகளும் ஆண்டுதோறும் வந்து செல்கின்றனர். அயோத்தி புதிய விமான நிலையத்தின் முதற்கட்டமே தற்போது செயல்பாட்டில் உள்ளது. இது 10 லட்சம் பயணிகளை கையாள முடியும் அளவிற்கு இது உருவாக்கப்பட்டுள்ளது. இந்த விமான நிலையமானது 2025ம் ஆண்டு சர்வதேச விமான நிலையமாக மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது. பின்னர், இந்த விமான நிலையமானது 6 மில்லியன் பயணிகளை கையாளும் திறன் கொண்டதாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.

அயோத்தியில் புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையம் தற்போது 60 ஆயிரம் பயணிகளை தினமும் கையாளும் திறன் கொண்டதாக உள்ளது. மேலும், 1200 ஏக்கர் பரப்பளவில் பசுமை நகரம் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. அயோத்தியில் தற்போது 17 ஹோட்டல்கள் 590 அறைகளுடன் இயங்கி வருகிறது. 73 புதிய ஹோட்டல்கள் கட்டப்பட உள்ளது. அதில் 40 தங்கும் விடுதிகள் பணிகள் நடைபெற்று வருகிறது. நாட்டின் மிகப்பெரிய ஹோட்டல்களும் அயோத்தியில் விரைவில் தங்களது ஹோட்டல்களை கட்ட திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Tags :
5 கோடி சுற்றுலா பயணிகள்ஆண்டு தோறும்திருப்பதியை விஞ்சும் அயோத்திஜெஃப்ரிஸ் ப்ரோக்கரேஜ்
Advertisement
Next Article