For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Ayodhya: குழந்தை ராமருக்கு மன அழுத்தம்!… ஓய்வு கொடுக்க தினமும் ஒரு மணிநேரம் கோவில் மூடப்படும்!… அறக்கட்டளை முடிவு!

10:00 AM Feb 17, 2024 IST | 1newsnationuser3
ayodhya  குழந்தை ராமருக்கு மன அழுத்தம் … ஓய்வு கொடுக்க தினமும் ஒரு மணிநேரம் கோவில் மூடப்படும் … அறக்கட்டளை முடிவு
Advertisement

அயோத்தி ராமர் கோவிலை தினந்தோறும் பகலில் ஒரு மணிநேரம் மூடுவதற்கு அறக்கட்டளை முடிவு செய்துள்ளது.

Advertisement

Ayodhya: உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் பிரமாண்டமாக கட்டப்பட்ட ராமர் கோயில் கும்பாபிஷேக விழா கடந்த மாதம் 22ம் தேதி நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை தொடர்ந்து நாள்தோறும் கோயிலுக்கு வரும் பக்தர்களின் கூட்டம் அதிகரித்தபடி இருக்கின்றது. இந்நிலையில் தரிசன நேரத்தில் ஒரு மணி நேரம் கோயிலை மூடுவதற்கு ராமர் கோயில் அறக்கட்டளை முடிவு செய்துள்ளது. இதன்படி நேற்று முதல் பிற்பகல் 12.30 மணி முதல் 1.30 மணி வரை கோயில் நடை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ராமர் கோயிலில் இருப்பது 5வயது குழந்தை. இவ்வளவு நேரம் விழித்திருப்பதின் மன அழுத்தத்தை அவரால் தாங்க முடியாது. எனவே குழந்தை தெய்வத்துக்கு சிறிது ஓய்வு கொடுப்பதற்கு அறக்கட்டளை முடிவு செய்து நாள்தோறும் ஒரு மணி நேரம் கோயில் மூடப்படும் என்று அறிவித்துள்ளது.

English summary
In a move to ensuring the well-being of the deities, the Ram Mandir in Ayodhya will observe a one-hour closure every afternoon, timings and other details inside

Read More: அயோத்தி ராமர்..!! 15 கிலோ தங்கம், 18,000 வைரங்கள் மற்றும் மரகதங்கள்..!! பிரம்மிக்க வைக்கும் தகவல்கள்..!!

Tags :
Advertisement