For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Ayodhya: ராமர் கோவிலுக்கு படையெடுக்கும் அரசியல்வாதிகள்!… திடீரென அலைமோதும் மக்கள் கூட்டம்!… ஏன் தெரியுமா?

10:10 AM Feb 20, 2024 IST | 1newsnationuser3
ayodhya  ராமர் கோவிலுக்கு படையெடுக்கும் அரசியல்வாதிகள் … திடீரென அலைமோதும் மக்கள் கூட்டம் … ஏன் தெரியுமா
Advertisement

Ayodhya: அயோத்தி ராமர் கோவிலில் கடந்த ஜனவரி 22ம் தேதி கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது. அதன்பின்னர் ஜனவரி 23ம் தேதியில் இருந்து காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை அயோத்தி ராமர் கோயிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் நாள்தோறும் பிற்பகல் 12.30 மணி முதல் 1.30 மணி வரை ஒரு மணி நேரம் கோயில் நடை அடைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. குழந்தை ராமர் நாள் முழுவதும் ஓய்வில்லாமல் இருப்பதால் பகலில் ஒரு மணி நேரம் ஓய்வு கொடுக்க வேண்டும் என்பதற்காக கோயில் நிர்வாகம் இந்த முடிவு எடுத்துள்ளது.

Advertisement

இந்நிலையில், அயோத்தி ராம ஜென்ம பூமி கோயிலில் குழந்தை ராமரை தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். கடந்த இரண்டு மூன்று நாட்களாக பக்தர்கள் கூட்டம் வழக்கத்தைவிட அதிகமாக உள்ளது. ராமர் கோயிலில் ஒரு மணி நேரம் தரிசனம் நிறுத்தப்படும் என அறிவித்த பிறகே கூட்டம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. அரசியல் கட்சிகளை சேர்ந்த பிரமுகர்களும் அயோத்தி ராமர் கோயிலுக்கு வருகை புரிந்து வருகின்றனர்.

கடந்த வாரம் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது குடும்பத்துடன் அயோத்தி கோயிலுக்கு சென்ற வந்தார். இதே போல் பாஜக பிரமுகர்களும் அயோத்தி ராமர் கோயிலுக்கு சென்று வருகின்றனர். இதனிடையே டெல்லியில் நேற்று நடைபெற்ற பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தின் நிறைவு நாளான நேற்று அயோத்தி ராமர் கோயில் குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. புதிய காலச்சக்கரத்தின் தொடக்கமாக உள்ள இந்த கோயிலின் மூலம் அடுத்த 1000 ஆயிரம் ஆண்டுகளுக்கு ராம ராஜ்யம் நிறுவப்படுவதை பறைசாற்றுவதாக உள்ளது என தெரிவிக்கப்பட்டது.

English summary:Politicians raiding Ram temple

Readmore:https://1newsnation.com/50-percent-of-cost-of-production-should-be-ensured/

Advertisement