For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

அட்டகாசமான அறிவிப்பு..!! தீபாவளி பண்டிகைக்கும் சிறப்பு தொகுப்பு..!! என்னென்ன பொருட்கள்..?

Political parties have demanded special package in Tamilnadu ration shops on the occasion of Diwali festival.
02:56 PM Oct 04, 2024 IST | Chella
அட்டகாசமான அறிவிப்பு     தீபாவளி பண்டிகைக்கும் சிறப்பு தொகுப்பு     என்னென்ன பொருட்கள்
Advertisement

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு ரேஷன் கடைகளில் சிறப்பு தொகுப்பு வழங்க வேண்டும் என அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

Advertisement

தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையையானது உழவர்கள் திருநாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பண்டிகையை தமிழக மக்கள் உற்சாகமாக கொண்டாடப்பட வேண்டும் என்பதற்காக ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசு சார்பில் பச்சரிசி, சர்க்கரை, வெல்லம், முந்திரி, கரும்பு உள்ளிட்ட பொருட்கள் ரேஷன் கடைகளில் வழங்கி வருகிறது. இது பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், ஆயிரம் ரூபாயை சேர்த்து வழங்கி வருகிறது. இதனால் ஏழை, எளிய மக்களும் பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், பொங்கல் பண்டிகையை போன்று தீபாவளி பண்டிகையையும் மக்கள் வெகு விமர்சையாக பட்டாசு வெடித்து கொண்டாடுகின்றனர். பொங்கல் பண்டிகையை போன்று தீபாவளி பண்டிகைக்கும் சிறப்பு தொகுப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், “அக்டோபர் 31ஆம் தேதி அனைத்துப் பகுதி மக்களாலும் தீவாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. ஆனால், விலைவாசி உயர்வின் காரணமாக உழைக்கும் மக்களுக்கு இது தித்திக்கும் தீபாவளியாக அமைவதற்கு மாறாக திண்டாடும் தீபாவளியாக மாறிவிடும் சூழல் இருக்கிறது.

தொழிலாளர்களும், விவசாயக் கூலித் தொழிலாளர்களும், சிறு-குறு விவசாயிகளும் தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியோடு கொண்டாட முடியாத அளவிற்கு நாடு முழுவதும் அனைத்து உணவுப் பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. எனவே, தமிழ்நாட்டில் சுமார் 7 கோடி பேர்களை உள்ளடக்கிய 2.25 கோடி குடும்பங்களுக்கு ரேஷன் கடைகளே ஆதாரமாக இருக்கின்றன. இதனைக் கணக்கில் கொண்டு தீபாவளியை எதிர்கொள்வதற்கும் ரேஷன் கடைகள் வழியாக அனைத்துப் பகுதி மக்களுக்கும் தேவையான பொருட்களை வழங்குவது பொருத்தமாக இருக்கும்.

எனவே அரிசி, சர்க்கரை, மைதா, கடலை மாவு, பாமாயில், கோதுமை, மண்ணெண்ணெய், பருப்பு வகைகள், ரவை, மல்லி, மிளகாய் வத்தல், சீரகம், மிளகு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை ரேஷன் கடைகளில் வழங்குவதன் மூலம் 7 கோடி மக்கள் பயன் அடைய முடியும்” என அக்கட்சி தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசின் முடிவு என்ன.?

இது தொடர்பாக முதலமைச்சர் முக.ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில் அக்டோபர் 8ஆம் தேதி நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் தீபாவளி தொகுப்பாக மைதா, ரவை, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் வழங்குவது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து, தீபாவளி தொகுப்பு தொடர்பாக உணவு பொருட்கள் வழங்கல் துறை அறிவிப்பு வெளியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Read More : பணத்திற்காக தற்காலிகமாக திருமணம் செய்யும் இளம்பெண்கள்..!! ஒரே பெண்ணுடன் 20 நபர்கள்..!! பெத்தவங்களே இப்படி செய்யலாமா..?

Tags :
Advertisement