For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பிரமிக்க வைக்கும் சொர்க்க வாசல்..!! 999 படிக்கட்டுகள்..!! 5,000 அடி உயரும்..!! எங்கு இருக்கு தெரியுமா..?

10:52 AM Apr 16, 2024 IST | Chella
பிரமிக்க வைக்கும் சொர்க்க வாசல்     999 படிக்கட்டுகள்     5 000 அடி உயரும்     எங்கு இருக்கு தெரியுமா
Advertisement

பொதுவாகவே அனைவருக்கும் நான் இறந்தால் சொர்க்கத்திற்கு தான் செல்ல வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால், சொர்க்கம் எப்படி இருக்கும் என்பது குறித்து யாருக்கும் தெரியாது. சொர்க்கம் என்றால் மகிழ்ச்சியளிக்கும் தருணத்தை அனைவருக்கும் வழங்கும் என பலராலும் நம்பப்படுகிறது. அப்படி உலகில் ஒரு குறிப்பிட்ட இடத்தை மக்கள் சொர்க்கத்தின் வாசல் என்று சொல்கின்றனர்.

Advertisement

அந்தவகையில், சீனாவில் இருக்கும் ஒரு இடத்தை சொர்க்கத்தின் வாசல் என மக்கள் அழைக்கின்றனர். சீனாவின் ஹுனான் மாகாணத்தின் வடமேற்கு பகுதியில் ஜாங்ஜியாஜி என்ற பகுதியில் தியான்மென் மலை தேசிய பூங்காவில் உள்ள தியான்மென் மலையில் இயற்கையாகவே Natural Arch என்ற பகுதி தோன்றியுள்ளது. குகை வடிவில் இருக்கும் இந்த சொர்க்க வாசலானது கடல் மட்டத்தில் இருந்து 5,000 அடி உயரத்தில் காணப்படுகிறது. இந்த பகுதிக்கு அவ்வளவு எளிதில் யாரும் சென்றுவிட முடியாது. 2005ஆம் ஆண்டுக்கு பிறகே, இந்த குகைக்கு செல்ல கேபில் கார் அமைக்கப்பட்டது. இதன் மூலம் சுமார் 4,000 அடி வரை மட்டுமே செல்ல முடியும்.

மலையில் ஏறி செல்வதற்கு சாலைகளும் அமைக்கப்பட்டுள்ளது. சொர்க்க வாசலை சென்றடைய 999 படிக்கட்டுகளை கடந்து செல்ல வேண்டும். இந்த படிக்கட்டுகள் தான் சொர்க்கத்திற்கும் செல்லும் படிக்கட்டுகள் என அழைக்கப்படுகிறது. மலைகளுக்கு நடுவே 999 படிக்கட்டுகளை கடந்து சொர்க்க வாசலை பார்வையிடுவதற்கு ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான மக்கள் வருகை தருகின்றனர். மேலும், சீனர்களின் ஜோதிடத்தை பொறுத்தளவில் இலக்கம் 9 என்பது சிறந்த இலக்கமாகும். எனவே, தான் 999 படிகளை வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

Read More : உங்கள் நிறுவனத்திற்கு ஏப்.19ஆம் தேதி விடுமுறை இல்லையா..? உடனே இந்த நம்பருக்கு புகார் அளிக்கலாம்..!!

Advertisement