For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

எதிர்நோக்கி காத்திருக்கும் ரசிகர்கள்!! ஐபிஎல் கோப்பையை முத்தமிடபோவது யார்?

05:50 AM May 26, 2024 IST | Baskar
எதிர்நோக்கி காத்திருக்கும் ரசிகர்கள்   ஐபிஎல் கோப்பையை முத்தமிடபோவது யார்
Advertisement

2024 ஐபிஎல் இறுதிப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் இன்று மோதுகின்றன.

Advertisement

17வது ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 22ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கோலாகலமாக தொடங்கியது. கடந்த இரண்டு மாதத்திற்கு மேலாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ஐபிஎல் போட்டி இறுதிக்கட்டத்திறஅகு வந்துள்ளது. குவாலிபயர் 1 சுற்றில் மோதிக் கொண்ட கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய இரு அணிகளும்தான் இன்றிரவு நடைபெறும் இறுதிப்போட்டியில் மோதுகின்றன.

2024ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் சாம்பியன் யார் என்பதை தீர்மானிக்கும் போட்டியில் இன்று இரு அணிகளும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேருக்கு நேர் மோத உள்ளன. இந்த தொடருக்காக ஏலத்தில் அதிக விலை கொடுத்து எடுக்கப்பட்ட வீரர்கள் இருவர் நேருக்கு நேர் இறுதிப்போட்டியில் மோதிக்கொள்ள உள்ளது இன்னும் எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது. இந்த தொடர் தொடங்குவதற்கு முன்பு கடந்தாண்டு இறுதியில் ஏலம் நடைபெற்றது. அந்த ஏலத்தில் அதிக விலைக்கு போன வீரராக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மிட்செல் ஸ்டார்க் விளங்கினார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மிட்செல் ஸ்டார்க்கை ரூபாய் 24.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. ஆஸ்திரேலிய வீரர் பாட் கம்மின்சை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ரூபாய் 20.50 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. பாட் கம்மின்ஸ் தலைமையில் ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப், உலகக்கோப்பையை வென்றது. இந்த நிலையில் மிட்செல் ஸ்டார்க் ஆஸ்திரேலிய அணிக்காக தொடர்ந்து அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தவும் அவர் மீதும் எதிர்பார்ப்பு எகிறியது. இதன் காரணமாகவே, நடப்பு ஐ.பி.எல். தொடருக்கான ஏலத்தில் இவர்களை ஏலத்தில் எடுக்க பெரும் போட்டி நிலவியது. இதையடுத்து, மிட்செல் ஸ்டார்க்கை கொல்கத்தா அணியும், பாட் கம்மின்சை சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும் ஏலத்தில் எடுத்தனர்.

கடந்த தொடரில் மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹைதராபாத் அணி நடப்பு தொடரில் பேட் கம்மின்ஸ் தலைமையில் அசத்தலாக ஆடி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. அதேபோல, ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா அணியின் முக்கிய பந்துவீச்சாளர் ஸ்டார்க் குவாலிபயர் சுற்றில் அசத்தலாக பந்துவீசினார். இதனால், இந்த தொடரில் அதிக தொகைக்கு ஏலம் போன இந்த 2 வீரர்களின் செயல்பாடுகளும் இறுதிப்போட்டியில் எப்படி இருக்கப்போகிறது என்பதை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். இறுதி வரை வென்று ஐபிஎல் கோப்பையை முத்தமிட போவது யார் என்பதை பார்ப்போம்.

Read More: அம்பேத்கர், காந்தி குறித்து பேசி அதிர விட்ட ஜான்வி கபூர்..! இணையத்தில் வைரல்!

Tags :
Advertisement