மதுவைவிட கல்லீரலில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் உணவுகள்.? மருத்துவர்களின் எச்சரிக்கை.!
நவீன காலத்தில் நாம் உண்ணும் உணவுகளின் மூலம் நமக்கு பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன. ஊட்டச்சத்து குறைந்த உணவை உண்ணும் போது நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து உடலில் தொற்று கிருமிகள் தாக்குகின்றன. சத்தான உணவை உண்பதே இதற்கு ஒரே தீர்வு. இந்த ஊட்டச்சத்துக்கள் நம் உடலில் குறையும் போது நம் உடல் உறுப்புகளின் ஆரோக்கியம் குறைகிறது.
மேலும் நம் உடலில் உள்ள உறுப்புகளில் முக்கியமான ஒன்று கல்லீரல். உடலில் தேங்கும் நச்சுக்களை வெளியேற்றும் முக்கிய வேலையை கல்லீரல் செய்து வருகிறது. செரிமான மண்டலத்தின் செயல்பாட்டிற்கு முக்கிய பங்கு வகிக்கிறது. இது ஆரோக்கியத்திற்கு இன்றியமையாத உறுப்பாக இருந்து வருகிறது. ஆல்கஹால் எடுத்து கொண்டால் எந்த அளவிற்கு கல்லீரல் மோசமாகும் அதே போல் ஒரு சில உணவுகள் உண்பதன் மூலம் கல்லீரலில் மோசமான பின் விளைவுகளை ஏற்படுத்துகிறது. அவை என்னென்ன என்பதை பார்க்கலாம்?
1. வெண்ணெய் - வெண்ணையில் உள்ள அதிகப்படியான கொழுப்பை உன்பதன் மூலம் கல்லீரலின் செயல்பாட்டை கடினமாக்குகிறது. இதனால் அடிக்கடி வெண்ணையை சாப்பிட்டு வந்தால் கல்லீரலின் செயல்பாடு கடினமடைந்து செயலிழந்து போகும்.
2. பிரென்ச் பிரைஸ் மற்றும் பொறித்த உணவுகள் - இதனை நீண்ட காலமாக சாப்பிட்டு வந்தால் கல்லீரலில் அதிகப்படியாக கொழுப்பு சேர்ந்து வீக்கம் அடையும்.
3. பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் - பதப்படுத்தப்பட்ட இறைச்சியில் அதிகப்படியான கொழுப்புகள் நிறைந்துள்ளன. இதனை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால் கல்லீரலில் அதிகமாக கொழுப்பு சேரும். மேலும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் உண்பதன் மூலம் கல்லீரல் வீக்க நோய் ஏற்படும்.
4. இனிப்புகள் - இனிப்பு பொருட்களை அடிக்கடி சாப்பிடுவதால் பல்வேறு நோய்கள் ஏற்படுவதோடு கல்லீரலை பாதிக்கிறது. இனிப்பு பொருட்களை செரிமானம் செய்ய கல்லீரல் அதிகமாக வேலை செய்ய ஆரம்பித்து பின் செயலிழந்து போகும்.
5. பர்கர் மற்றும் பீட்சா - ஹோட்டல்களில் விற்கப்படும் பர்கர் மற்றும் பீட்சாவை பலரும் சாப்பிட்டு இருப்போம். இதை அடிக்கடி சாப்பிடும் போது உடலில் அதிகப்படியான கொழுப்பு சேர்ந்து கல்லீரல் செயல்பட தடை செய்யும்.