முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

ICMR எச்சரிக்கை..! "புரதச்சத்து பவுடர்கள் உட்கொள்வதை தவிர்க்கவேண்டும்.."

11:05 AM May 10, 2024 IST | Mari Thangam
Advertisement

உடல் எடையை கூட்டுவதற்காக புரோட்டீன் பவுடர்களை பயன்படுத்துபவர்கள் உடனடியாக அதனை நிறுத்திக் கொள்ள வேண்டும் என ஐசிஎம்ஆர் எச்சரித்துள்ளது.

Advertisement

புரோட்டின் பவுடர் தற்போது மிகவும் பிரபலமாகிக் கொண்டு வருகிறது. ஒரு டம்ளர் கிளாஸ் பாலில் புரோட்டீன் பவுடரைச் சேர்ப்பது ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான எளிய வழியாகத் தோன்றலாம். தசை மற்றும் எலும்பின் வலிமைக்கும் சக்திக்கும் பல உடல் செயல்பாடுகளின் பராமரிப்பிற்கும் புரதம் அவசியம். வயதானவர்கள் பசியின்மை காரணமாக போதுமான புரதத்தை உட்கொள்வதில்லை. அதனால் அவர்கள் புரோட்டின் பவுடரை நாடுகிறார்கள். ஆனால், ஒரு ஸ்கூப் சாக்லேட் அல்லது வெண்ணிலா புரோட்டின் பவுடரில் கூட சில உடல் நல அபாயங்கள் இருக்கலாம் என்கிறார்கள் நிபுணர்கள்.

சமீபத்தில் இந்த புரோட்டீன் பவுடர்கள் குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி குழுமம் ஆய்வு மேற்கொண்டது. ஆய்வின் முடிவில், பல புரோட்டீன் பவுடர் நிறுவனங்கள், இந்த பவுடர்களில் சர்க்கரை, கலோரிகள் இல்லாத இனிப்புகள், செயற்கை நிறமிகள் ஆகியவற்றை கலப்பது தெரிய வந்துள்ளது. இவற்றை எடுத்துக் கொள்வதால் நீண்ட கால அடிப்படையில் பல்வேறு உடல் நலப் பிரச்சினைகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக ஐசிஎம்ஆர் எச்சரித்துள்ளது.

புரோட்டீன் தவிர கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் கொழுப்புகள் உடலில் இயற்கையான உணவு செரிமானத்திற்கு மிகவும் அவசியம். ஆனால் இவ்வாறு அதிக அளவிலான புரோட்டீன்களை எடுத்துக் கொள்வதால், அது உடலுக்கு தீமை விளைவிக்கும் என தெரிய வந்திருப்பதால் அவற்றை தவிர்க்க வேண்டும் என ஐசிஎம்ஆர் அறிவுறுத்தியுள்ளது. அதேபோல் அதிகளவு உப்பு எடுத்துக் கொள்வதையும் தவிர்க்க வேண்டும் எனவும், சர்க்கரை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளை எடுத்துக் கொள்வதையும் குறைக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சமச்சீரான உணவை எடுத்துக் கொள்வது மட்டுமே உடலுக்கு முழுமையான வலிமையை தரும் என ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. புரோட்டீன் பவுடர்களை அதிக அளவில் எடுத்துக் கொள்வதால் தசைகள் அதிகரிக்கும் என்ற தவறான கருத்து உடற்பயிற்சி கூடத்திற்கு செல்வோருக்கும், விளையாட்டு வீரர்கள் இடையேயும் இருப்பதாக ஐசிஎம்ஆர் கவலை தெரிவித்துள்ளது.

READ MORE: ஆன்லைனில் ஓட்டு போடும் வசதி..!! குடிபோதையில் பத்திரிகையாளர்களிடம் உளறிய ஜோதிகா..!! வெச்சி செய்த பயில்வான்..!!

Tags :
#HealthicmrICMR alertprotein powder
Advertisement
Next Article