முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

104 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியது...! சென்னை ஏரிகளில் சராசரி நீர் இருப்பு 74.9% ஆக உயர்வு...!

07:40 AM Nov 15, 2023 IST | 1newsnationuser2
Advertisement

சென்னை குடிநீர் ஏரிகளில் சராசரி நீர் இருப்பு 74.9% உள்ளது .

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் 104 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியது. சென்னை மாவட்டத்தி்ல் 5 ஏரிகளும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 58 ஏரிகளும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 41 ஏரிகளும் நிரம்பி உள்ளதாக நீர்வள துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். கனமழை காரணமாக ஏரிகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதாக கூறியுள்ளனர்.

Advertisement

அதே போல தொடர் மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியில் வினாடிக்கு 301 கன அடி நீர்வரத்து உள்ளது. ஏரியின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் கூடுதலாக உபரி நீர் வெளியேற்ற வாய்ப்பு உள்ளது. சென்னை குடிநீர் ஏரிகளில் சராசரி நீர் இருப்பு 74.9% உள்ளது . மேலும் 5 முக்கிய ஏரிகளின் மொத்த கொள்ளளவான 11.757 டிஎம்சியில், தற்போது 8.806 டிஎம்சி நீர் இருப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Chennai lakerainRain chennaiwater level
Advertisement
Next Article