For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

"ஏ.வி ராஜு பாஜகவில் சேரலாம்.?.." புதிய பரபரப்பை கிளப்பிய காயத்ரி ரகுராம்.!

08:31 PM Feb 20, 2024 IST | 1newsnationuser7
 ஏ வி ராஜு பாஜகவில் சேரலாம்      புதிய பரபரப்பை கிளப்பிய காயத்ரி ரகுராம்
Advertisement

கூவத்தூர் ரிசார்ட்டில் பாரதிய ஜனதா கட்சியின் எம்எல்ஏக்கள் நடிகைகளுடன் உல்லாசமாக இருந்ததாக செய்தியில் பேட்டி கொடுத்து தமிழகம் முழுவதும் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறார் ஏ.வி ராஜு. இது தொடர்பாக பேசிய அவர் அதிமுக முன்னாள் எம்எல்ஏ வெங்கடாசலம் தனக்கு திரிஷா தான் வேண்டும் என்று அடம் பிடித்ததாக தெரிவித்திருக்கிறார்.

Advertisement

இதற்காக 25 லட்ச ரூபாயை கொடுத்து நடிகை திரிஷாவை கருணாஸ் அழைத்து வந்ததாகவும் எனது பேட்டியில் தெரிவித்து இருந்தார் ஏவி ராஜு. மேலும் தமிழ் சினிமாவின் பல நடிகைகள் கூவத்தூருக்கு வந்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார். இவரது இந்த கருத்துக்கு சினிமா துறையினர் உட்பட பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இயக்குனர் மற்றும் நடிகர் சேரன் உட்பட பலரும் ஏவி ராஜு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசை வலியுறுத்தி வருகின்றனர்

இந்நிலையில் நடிகை காயத்ரி ரகுராம் இந்த விவகாரம் தொடர்பாக ஏ வி ராஜுவுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். மேலும் சினிமா துறையில் இருக்கும் நடிகைகள் யாரும் இது போன்ற ஒரு அவதுறை எதிர்கொள்ளும் போது அவர்களுக்கு ஆதரவாக நான் இருப்பேன் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் நடிகைகளை தரக்குறைவாக பேசியதற்காக நடிகர் சங்கம் அவர் மீது வழக்கு போட வேண்டும் எனவும் தெரிவித்திருக்கிறார்.

இந்நிலையில் நடிகை குஷ்பூ இது குறித்து மௌனமாக இருப்பது ஏன் என கேள்வி எழுப்பி இருக்கிறார். மேலும் ஏவி ராஜுவின் கருத்திற்கு மகளிர் அமைப்புகளும் மௌனமாக இருப்பது இந்த மாதிரியான மனநிலை என தெரியவில்லை இன்று குற்றம் சாட்டி உள்ளார். இதே மனநிலையோடு ஏவி ராஜு பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தாலும் அதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை எனவும் தெரிவித்திருக்கிறார்.

English Summary: Gayathri Raguram condemns the controversial and hate speech by admk ex member against trisha and tamil cinema actresses.

Tags :
Advertisement