மக்கள் கண்முன்னே கடலில் விழுந்த விமானம்.. அந்த கணமே பிரிந்த உயிர்கள்..!! - பரபரப்பு காட்சி
ஆஸ்திரேலிய சுற்றுலா தீவில் இருந்து புறப்படும் போது கடல் விமானம் விபத்துக்குள்ளானதில் சுவிஸ் மற்றும் டேனிஷ் சுற்றுலா பயணிகள் உட்பட 3 பேர் பலியாகினர், மேலும் 3 பேர் காயமடைந்தனர். செஸ்னா 208 கேரவனில் இருந்த ஏழு பேரில் ஒருவர் மட்டும் ரோட்னெஸ்ட் தீவில் விபத்தின் பின்னர் காயமின்றி மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
ஸ்வான் ரிவர் சீப்ளேன்ஸுக்குச் சொந்தமான விமானம், ரோட்னெஸ்ட் தீவிலிருந்து கிழக்கே 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மேற்கு ஆஸ்திரேலியா மாநிலத் தலைநகரான பெர்த்தில் உள்ள அதன் தளத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்த போது விபத்துக்குள்ளானது.
சுவிஸ் சேர்ட்ந 65 வயது பெண், டென்மார்க்கை சேர்ந்த 60 வயது ஆண் மற்றும் பெர்த்தை சேர்ந்த 34 வயது ஆண் விமானி என மூன்று பேர் இந்த விபத்தில் உயிரிழந்தனர். காயமடைந்த மூவரும் பெர்த் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.. விபத்துக்குள்ளான விமானம் கடலில் மிதக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.