பரிதாப நிலையில் ஆஸ்திரேலியா கேப்டன்..!! உலகக்கோப்பையை வென்றவருக்கு இப்படி ஒரு நிலைமையா..?
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான உலகக்கோப்பை இறுதிப் போட்டி அகமதாபாத் மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்தது. இதில், முதலில் விளையாடிய இந்தியா 240 ரன்கள் எடுத்தது. பின்னர், விளையாடிய ஆஸ்திரேலியா அணியில் டிராவிஸ் ஹெட் மற்றும் மார்னஷ் லபுஷேன் ஜோடி வெற்றியை தேடிக் கொடுத்தது. இறுதியாக 43 ஓவர்களில் ஆஸ்திரேலியா 4 விக்கெட்டுகளை இழந்து 241 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலமாக ஆஸ்திரேலியா 6-வது முறையாக உலகக்கோப்பையை வென்றது.
கடந்த 1975ஆம் ஆண்டு முதல் தற்போது வரை நடந்த உலகக்கோப்பை போட்டிகளில் ஆஸ்திரேலியா 6 முறை வெற்றி கண்டுள்ளது. இதுவரை ஆலன் பார்டர் (1987), ஸ்டீவ் வாக் (1999), ரிக்கி பாண்டிங் (2003 மற்றும் 2007), மைக்கேல் கிளார்க் (2015), பேட் கம்மின்ஸ் (2023) உலகக்கோப்பையை வென்றுள்ளனர்.
இந்நிலையில், டிராபியுடன் நாடு திரும்பிய ஆஸ்திரேலியா கேப்டன் பேட் கம்மின்ஸை வரவேற்க ரசிகர்கள் யாரும் விமான நிலையம் வரவில்லை. கேப்டனுக்கே இந்த நிலைமையா என்று விமர்சிக்கும் அளவிற்கு நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். பத்திரிகை மற்றும் மீடியாவைச் சேர்ந்தவர்கள் மட்டுமே புகைப்படமும், வீடியோவும் எடுத்தனர்.