பிணைக் கைதியாக அத்தை..!! கரும்புத் தோட்டத்திற்குள் சிறுமி..!! 2 இளைஞர்கள் மாறி மாறி கூட்டு பலாத்காரம்..!!
உத்தரப்பிரதேசத்தில் அத்தையுடன் பண்ணைக்குச் சென்ற சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக போலீசில் புகாரளிக்கப்பட்டுள்ளது. அப்போது, சிறுமியை அத்தையை பிணைக் கைதியாக பிடித்து வைத்து, அவருடன் வந்த சிறுமியை அருகில் உள்ள கரும்புத் தோட்டத்திற்குள் குற்றம் சாட்டப்பட்ட அப்துல் காதர் மற்றும் மஜித் ஆகிய இருவரும் இழுத்துச் சென்றுள்ளனர்.
அங்கு சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதற்கு சிறுமி கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். ஊடக அறிக்கையின்படி, சம்பவத்திற்குப் பிறகு சிறுமியும் அவரது அத்தையும் பயந்து வீட்டிற்கு திரும்பியுள்ளனர். பின்னர் குற்றம் சாட்டப்பட்டவர் சிறுமியின் ஆபாச வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
இதனால், மனமுடைந்துபோன சிறுமி, வேலை நிமித்தமாக வேறு மாநிலத்தில் இருந்த தனது தந்தைக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளார். அவர் சனிக்கிழமை திரும்பி வந்து தனது மகளை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று புகார் அளித்தார். சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், சிஓ ஷீஷ்கர் அங்கு வந்து சிறுமி மற்றும் அவரது அத்தையிடம் வாக்குமூலம் பெற்றார். சிறுமி மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு, குற்றவாளியைக் கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.