முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

ரூ.6000.. பி.எம் கிசான் திட்டத்தில் போலி பயனாளிகளை அடையாளம் காண தணிக்கை...! மத்திய அரசு அதிரடி

Audit to identify ineligible beneficiaries under PM Kisan scheme
08:50 AM Dec 07, 2024 IST | Vignesh
Advertisement

பிரதமரின் கிசான் திட்டத்தில் தகுதியற்ற பயனாளிகளை அடையாளம் காணுவதற்கான தணிக்கை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

Advertisement

பிரதமரின் கிசான் திட்டம் என்பது நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பிரதமரால் தொடங்கப்பட்ட மத்திய அரசின் திட்டமாகும். இந்தத் திட்டத்தின் கீழ், ஆண்டுதோறும் நான்கு மாதங்களுக்கு ஒரு முறை மூன்று சம தவணைகளில் ரூ.6,000/- நேரடி பணப்பரிமாற்றத்தின் மூலம் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு செலுத்தப்படுகிறது.

இத்திட்டம் உலக அளவில் நேரடி பணப் பரிமாற்ற திட்டத்தின் மாபெரும் திட்டமாகும். விவசாயிகளை மையமாகக் கொண்ட டிஜிட்டல் உள்கட்டமைப்பு வசதிகள் மூலம் இடைத்தரகர்களின் தலையீடு எதுவும் இன்றி திட்டத்தின் பயன்களை நாடு முழுவதும் உள்ள அனைத்து விவசாயிகளையும் சென்றடைவதை உறுதி செய்துள்ளது. பயனாளிகளை பதிவு செய்வதிலும் சரிபார்ப்பதிலும் முழுமையான வெளிப்படைத்தன்மையை பராமரித்தல் மூலம் மத்திய அரசு இதுவரை 18 தவணைகளில் ரூ.3.46 லட்சம் கோடிக்கு மேல் வழங்கியுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் பயனாளிகளின் சுய சான்றிதழ் அடிப்படையில் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டு மாநிலங்களால் பதிவு செய்யப்பட்டு வந்தது. நாடு முழுவதும் இதுவரை தகுதியற்ற பயனாளிகளிடமிருந்து மொத்தம் ரூ.335 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் விவசாயிகள் தங்களது சுயவிவரங்களை ஆன்லைன் மூலம் பதிவு செய்யலாம். அத்தகைய விண்ணப்பங்கள் அனைத்தும் உரிய சரிபார்ப்புக்குப் பிறகு சம்பந்தப்பட்ட மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களால் அங்கீகரிக்கப்படுகின்றன. தேவையான ஆவணங்கள் / விவரங்கள் விண்ணப்பதாரரால் வழங்கப்படாத சந்தர்ப்பங்களில், விண்ணப்பம் மாநில / யூனியன் பிரதேச அரசுகளால் நிராகரிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Tags :
central govtfake accountfarmersPm kissanமத்திய அரசு
Advertisement
Next Article