ஆடி செவ்வாய்..!! இன்று விரதமிருந்து இப்படி வழிபட்டால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் தெரியுமா..?
இன்று ஆடி செவ்வாய்க்கிழமை. ஆடி வெள்ளி போலவே ஆடி செவ்வாய் கிழமையும் விசேஷமானது. ஆடி செவ்வாய் தேடி குளி என்பது ஆன்மீக அன்பர்களின் வாக்கு. ஆடி செவ்வாயில் அம்பிகை வழிபாடு வாழ்வில் எல்லா வளங்களையும் கிடைக்கச் செய்யும். இந்த நாளில் விரதம் இருந்து வழிபாடு செய்தால் வேண்டிய வரம் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.
ஆடி செவ்வாய் கிழமைகளில் அதிகாலையில் எழுந்து குளித்துவிட வேண்டும். பூஜையறையை நீரால் கழுவி சுத்தம் செய்து மலர்களால் அலங்கரித்து, பழங்கள் மற்றும் பாலை நீங்கள் வணங்கும் இறைவனுக்கு நிவேதனம் செய்யலாம். வீட்டில் உள்ள சுமங்கலி பெண்கள் விரதம் இருந்து வழிபட்டால், வீடு சுபிட்சம் அடையும். அதே போல் ஜாதக கட்டத்தில் செவ்வாய் தோஷம், நாக தோஷம், ராகு கேது தோஷம் இருப்பவர்களும் இந்த விரதத்தை பின்பற்றலாம்.
ஆடி செவ்வாய் கிழமைகளில் வீட்டு பூஜையறையில் இரண்டு குத்துவிளக்குகளை ஏற்றி வைத்து, குல தெய்வத்தை வணங்கிய பின் நீங்கள் வழிபட இருக்கும் இறைவனை வேண்டி அன்றைய தினம் முழுவதும் உபவாசம் இருக்கலாம். அப்படி முடியாதவர்கள் பால், பழம் சாப்பிடலாம். உடல் சூழ்நிலைக்கு ஏற்ப உங்களுடைய விரதத்தை அமைத்துக்கொள்ளலாம். சுத்தமான மனதோடு விரதம் இருக்க வேண்டும். செவ்வாய்க்கிழமை மாலை அம்பிகைக்கு சர்க்கரைப் பொங்கல், பால் பாயாசம், கேசரி இவைகளில் ஏதாவது ஒரு இனிப்பை செய்து வைக்கலாம்.
வாழை அல்லது வெற்றிலையில் அம்பிகை நாமாவளிகள், போற்றிகள் சொல்லி குங்கும அர்ச்சனை செய்ய வேண்டும். இந்த குங்குமத்தை 11 சுமங்கலி பெண்களுக்கு கொடுத்தால், கன்னிப்பெண்கள் திருமண யோகம் பெறுவார்கள். குழந்தைப்பேறு, கல்வி, தொழில் வளர்ச்சி, உடல் ஆரோக்கியம், செல்வம் என சகல நன்மைகளும் கிடைக்கப் பெறலாம்.
Read More : ’தமிழ்ப்புதல்வன்’ திட்டம்..!! உங்களுக்கும் ரூ.1,000 கிடைக்க இதையெல்லாம் பத்திரமா வெச்சிக்கோங்க..!!