ஆடி அமாவாசை!. தோஷம் நீங்க திதி கொடுங்கள்!. பூர்வ புண்ணியம் கிடைக்கும்!.
Aadi Amavasai: வழக்கமாக வரும் அமாவாசைகளில், தங்களது முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுக்க தவறியவர்கள், ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை, தை அமாவாசை தினத்தில் தர்ப்பணம் கொடுத்தால், ஆண்டு முழுவதும் அமாவாசை தினங்களில் முன்னோர்களை வழிபட்ட புண்ணியம் வந்து சேரும் என்பது ஐதீகம். சூரியன் வடக்கு திசையில் இருந்து தெற்கு திசை நோக்கிப் பயணமாகும் காலத்தினை தட்சிணாயம் என கூறுகின்றனர். இவை தமிழ் மாதங்களான ஆடி , ஆவணி , புரட்டாசி , ஐப்பசி , கார்த்திகை , மார்கழி மாதங்கள் வரை இவை நிகழும். இந்தக் காலம் இந்து சமயத்தில் தேவர்களின் ஓர் இரவுப் பொழுதாக கருதப்படுகிறது.
அந்தவகையில் இன்று ஆடி அமாவாசை. இன்று மாலை 5.32 மணி வரை ஆடி அமாவாசை இருப்பதால், இன்றுமுழுவதும் திதி கொடுக்கலாம். அதாவது, சூரியன் வடக்கு திசையில் இருந்து தெற்கு திசை நோக்கிப் பயணமாகும் காலத்தினை தட்சிணாயம் என கூறுகின்றனர். இவை தமிழ் மாதங்களான ஆடி , ஆவணி , புரட்டாசி , ஐப்பசி , கார்த்திகை , மார்கழி மாதங்கள் வரை இவை நிகழும். இந்தக் காலம் இந்து சமயத்தில் தேவர்களின் ஓர் இரவுப் பொழுதாக கருதப்படுகிறது.
சூரியன் தெற்கு திசையில் இருந்து வடக்கு திசை நோக்கி பயணிக்கும் காலத்தினை உத்ராயணம் என கூறுகின்றனர். தமிழ் மாதங்களான தை, மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி ஆகிய மாதங்கள் வரை இவை நிகழும். கடகம் ராசியில் சூரிய பகவான் பயணிக்கும் மாதமான ஆடி மாதம் முதல் தட்சிணாயன காலம் ஆரம்பமாகும். தட்சிணாயன காலமான ஆறுமாத காலம் தேவர்களுக்கு இரவுப் பொழுதாகும்.
ஆடி அமாவாசையின் சிறப்புகள்: ஆடி அமாவாசையின் போது சூரியன், சந்திரன் ஆகிய இரண்டு கிரகங்களும் இணைந்து இருப்பார்கள். குறிப்பாக ஆடி அமாவாசை காலத்தில் சந்திரன் தனது சொந்த வீடான கடகத்தில் பயணிக்கின்றார். இந்த நேரத்தில் சந்திரன் ஆட்சி பெற்று விளங்குகிறார். இந்த ஆடி அமாவாசை காலத்தில் தர்பணம் செய்வதற்கு உகந்த காலமாக விளங்குகின்றது.
இந்த நேரத்தில் புண்ணிய ஷேத்திரங்களாக விளங்கும் ராமேஸ்வரம், கன்னியாகுமரி உள்ளிட்ட சமூத்திரக் கரைகளில் தர்பணம் செய்வது நன்மைகளை தரும். எல்லா நதிகளும் சமுத்திரத்தில் முடிவதால், கடல் பகுதிகளில் தர்பணம் செய்வது சிறப்புகளை பெற்றுத் தரும் என்பது நம்பிக்கை. கடல் பகுதிகளில் இல்லாதவர்கள் ஆறு உள்ளிட்ட நதிக்கரைகளிலும் தர்பணம் செய்வது சிறப்புகளை ஏற்படுத்தி தரும்.
ஜோதிடத்தில் ஒருவரது ஜாதகத்தில் உள்ள 5ஆம் இடம் பூர்வ புண்ணிய ஸ்தானமாக விளங்குகின்றது. இந்த பூர்வ புண்ணிய ஸ்தானம் பலம் இழந்து இருந்தால் ஜாதகருக்கு கிடைக்க கூடிய விஷயங்கள் காலகாலத்திற்கு கிடைக்காது. திருமணம், குழந்தை பேறு உள்ளிட்டவை தள்ளிப்போகலாம்.
இது போன்ற தடைகளை தகர்த்து எறிய பித்ருக்களின் ஆசிர்வாதம் மிக அவசியம் ஆகும். இந்த ஆசீர்வாதம் கிடைக்கும் போது பூர்வ புண்ணிய ஸ்தானம் வலுப்பெறும் என்பது நம்பிக்கை. ஒருவருக்கு குலதெய்வ வழிபாடும், பித்ருக்கள் வழிபாடும் இணையும் போது அவர்கள் ஆசிர்வதிக்கப்பட்ட நபர்களாக விளங்குவார்கள். இவர்களுக்கு தேவையானது தேவையான நேரத்தில் தேவைக்கு ஏற்ப கிடைக்கும். பூர்வ புண்ணிய ஸ்தானம் வலுப்பெற்றவர்கள் போது என்ற மனதுடன் நிம்மதியான வாழ்கையை வாழ்வார்கள். மேலும் ஆடி அமாவாசை தினத்தில் காகத்திற்கு படையல் போடுவதும் முன்னோர்களை மகிழ்ச்சியாக்குவதற்கு எளிய வழியாகும்.