சொத்து விற்பவர்களின் கவனத்திற்கு..!! பட்ஜெட்டில் இந்த விஷயத்தை கவனிச்சீங்களா..?
ஆண்டுதோறும் ரூ.1 லட்சம் வரையிலான மூலதன ஆதாயத்திற்கு வரி விலக்கு அளிக்கப்படவுள்ளது. இது முந்தைய வரம்பை விட அதிகம். அத்துடன், நீண்ட கால மூலதன ஆதாய வரி (LTCG) உயர்வு சில குறிப்பிட்ட சொத்துகளின் மீது 12.5% ஆக குறைக்கப்பட்டுள்ளது. பட்டியலிடப்படாத பத்திரங்கள், கடன் மியூச்சுவல் பத்திரங்கள் மீதான மூலதன ஆதாயம் தற்போதுள்ள வரி விகிதங்களின்படி கணக்கிடப்படும்.
பட்ஜெட்டில் மூலதன ஆதாய வரி விதிப்பு எளிமையாக்கப்பட்டுள்ளது. அதன்படி, சொத்துகளை எவ்வளவு காலம் வைத்திருக்கிறோம் என்பதைப் பொறுத்து வரி நிர்ணயிக்கப்படும். பங்குகள் போன்ற பட்டியலிடப்பட்ட பத்திரங்களை வைத்திருப்பதற்கு 36 மாதங்களாக இருந்த காலம் தற்போது 12 மாதங்களாக குறைக்கப்பட்டுள்ளது.
பத்திரங்கள், கடன் பத்திரங்கள், தங்கப் பத்திரங்கள் ஆகியவற்றுக்கான காலம் 36 மாதங்களில் இருந்து 24 மாதங்களாக குறைக்கப்பட்டுள்ளது. இத்தகைய சொத்துகளை வைத்திருக்கும் காலம் குறைக்கப்பட்டுள்ளதால், ஓராண்டுக்குள் பங்குகளை விற்று மூலதன ஆதாயம் ஈட்டுபவர்களுக்கு இந்த வரி உயர்வு பாதகமாக அமையும். குறிப்பாக, பங்குச் சந்தையில் லாபம் ஈட்டுவதற்காக குறுகிய காலத்தில் பங்குகளை விற்பவர்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
வீடு, நிலம் போன்ற சொத்துகளை விற்கும்போது இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். குறிப்பாக, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சொத்தை ரூ.25 லட்சத்திற்கு வாங்கியிருந்து, அதை தற்போது ரூ.1 கோடிக்கு விற்றால், பழைய விதிகளின்படி கொள்முதல் விலையை உயர்த்தி, எஞ்சிய மூலதன ஆதாயத்திற்கு வரி செலுத்தலாம். ஆனால், தற்போது, கொள்முதல் விலையை உயர்த்த முடியாது. மாறாக உயர்ந்துள்ள விற்பனை விலை, பழைய கொள்முதல் விலையுடன் கழித்து, எஞ்சிய மூலதன ஆதாயத்திற்கு வரி செலுத்த வேண்டும்.
மத்திய பட்ஜெட்டில் வெளியாகியுள்ள இந்த அறிவிப்பால் ரியல் எஸ்டேட் துறை மிகவும் பாதிப்பை சந்திக்கும் என்று கூறப்படுகிறது. இருப்பினும், வீடுகளின் விலை குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Read More : “எப்போதும் போதையில் உலா வரும் சுறாக்கள்”..!! அதுவும் கொக்கைனாம்..!! விஞ்ஞானிகள் அதிர்ச்சி கண்டுபிடிப்பு..!!