முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

சொத்துக்கள் வாங்குவோரின் கவனத்திற்கு..!! சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட தமிழ்நாடு அரசு..!!

The Tamil Nadu government has brought a new facility for the convenience of property buyers like houses and plots.
08:26 AM Oct 04, 2024 IST | Chella
Advertisement

தற்போது, வீடு, மனை போன்ற சொத்துக்கள் வாங்குவோரின் வசதிக்காகவே, புதிய வசதியை தமிழ்நாடு அரசு கொண்டு வந்திருக்கிறது. இது தொடர்பான இணைய தள வசதி ஒன்றையும் அறிமுகம் செய்துள்ளது. அதாவது, சொத்து தொடர்பான வழக்கு விவரங்கள், நீதிமன்ற தடை உத்தரவுகள் எதுவும், வில்லங்க சான்றிதழ்களில் தெளிவாக தெரிவதில்லை. சொத்து உரிமை மாற்றம் தொடர்பாக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை, சம்பந்தப்பட்டவர்கள் சார் – பதிவாளரிடம் தாக்கல் செய்தால் மட்டுமே, அதுகுறித்து தெரியவரும்.

Advertisement

மற்றபடி, வழக்குகள் நிலுவையில் இருப்பது, அதன் தற்போதைய நிலவரம் இதெல்லாம் மக்களுக்கு தெரிவதில்லை. இந்த விவரம் எதுவும் தெரியாமல், அந்த சொத்துக்களை வாங்க நேர்கிறது. பத்திரப்பதிவுக்கு போகும்போதுதான், வழக்குகள் பற்றி தெரியவருகிறது. ஆனால், அந்த நேரத்தில் வேறு எதையும் செய்ய முடிவதில்லை. இந்த சிக்கலை தீர்க்கவே வருவாய் துறை முக்கிய அதிரடியை கையிலெடுத்துள்ளது.

அதன்படி, பட்டா, “அ” பதிவேடு, நில அளவை வரைபடம் போன்ற விவரங்களை ஆன்லைன் முறையில் பொதுமக்கள் பெற வேண்டும் என்பதற்காக இ – சேவை இணையதளத்தில் வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த வசதியை www.clip.tn.gov.in/ என்ற இணையதளத்தில் மக்கள் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More : பிஎம் கிசான் திட்டம்..!! நாளை வங்கிக் கணக்கிற்கு வருகிறது ரூ.2,000..!! விவசாயிகள் செம ஹேப்பி..!!

Tags :
சொத்து உரிமைதமிழ்நாடு அரசுவீட்டு மனை
Advertisement
Next Article