முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

பிளஸ் 2 மாணவர்களின் கவனத்திற்கு!! இன்று முதல் விடைத்தாள் நகல் பதிவிறக்கம் செய்யலாம்!!

06:12 AM May 28, 2024 IST | Baskar
Advertisement

12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு விடைத்தாள் நகல்களை இன்று பிற்பகல் 2 மணி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிப்பு

Advertisement

மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் இன்று பிற்பகல் 2 மணி முதல் விடைத்தாள் நகல்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், விடைத்தாள் நகல் பதிவிறக்கம் செய்த பிறகு மறுகூட்டல்-II/மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கலாம். www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் Application for Retotalling / Revaluation என்ற பக்கத்தை கிளிக் செய்து விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதனை பூர்த்தி செய்து இரு நகல்கள் எடுத்து உரிய கட்டணத்துடன் மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் மே 29 (புதன்கிழமை) பிற்பகல் 1 மணி முதல் ஜூன் 1 (சனிக்கிழமை) மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் தென்காசி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.
மறுமதிப்பீடு: பாடம் ஒவ்வொன்றிற்கும் ரூ.505, மறுகூட்டல்-I, உயிரியல்-ரூ.305
மற்ற பாடங்கள் ஒவ்வொன்றிற்கும்- ரூ.205 இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

Read More: ‘பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு தடுப்பூசி..!’ அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் நடவடிக்கை

Tags :
12th examகல்லூரிதேர்ச்சி
Advertisement
Next Article