முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

சென்னை மக்கள் கவனத்திற்கு.. இந்த வழித்தடத்தில் புறநகர் ரயில்கள் இயங்காது..!! - தெற்கு இரயில்வே

Attention people of Chennai.. Suburban trains will not run on this route..!! — Southern Railway
12:51 PM Nov 20, 2024 IST | Mari Thangam
Advertisement

சென்னையை பொறுத்தவரை மின்சார ரயில்கள் மூலம் தினசரி பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை அதிகம். செங்கல்பட்டு முதல் சென்னை கடற்கரை, சென்னை கடற்கரை முதல் வேளச்சேரி, சென்னை சென்ட்ரல் முதல் அரக்கோணம், சென்னை கடற்கரை முதல் கும்மிடிப்பூண்டி வரை மின்சார ரயில்கள் 15 நிமிட இடைவெளியில் இயக்கப்படுகின்றன. நாள்தோறும் இந்த ரயில்களில் லட்சக்கணக்கான மக்கள் பயணிக்கின்றனர்.

Advertisement

சென்னையில் ரயில் வழித்தடங்கள் பராமரிப்பு பணிகள் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. இதனால் மின்சார ரயில்கள் இயக்கம் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு சென்னை கடற்கரை இரயில் நிலையத்திலிருந்து செங்கல்பட்டு செல்லும் இரயில்கள் சிங்கப்பெருமாள் கோயில் வரை மட்டுமே இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்திருக்கிறது.

ஒவ்வொரு நாளும் சுமார் 20-25 லட்சம் பயணிகளை சென்னை புறநகர் ரயில்கள் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு சேர்க்கின்றன. நகரின் இயக்கத்திற்கு இவ்வளவு முக்கியமான இந்த ரயில்சேவையை பராமரிப்பது மிகவும் அவசியம். எனவே பராமரிப்புக்காக அவ்வப்போது புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. கடந்த 17ம் தேதியும் சென்னை கடற்கரை-தாம்பரம் ரயில்கள் ரத்து செய்யப்பட்டிருந்தன. இதனையடுத்து இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு சென்னை கடற்கரை இரயில் நிலையத்திலிருந்து செங்கல்பட்டு செல்லும் இரயில்கள் சிங்கப்பெருமாள் கோயில் வரை மட்டுமே இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்திருக்கிறது.

சென்னை எழும்பூர் - சிங்கப்பெருமாள் கோயில் - செங்கல்பட்டு இரயில்வே நிலையங்கள் இடையே இன்று முதல் 23ம் தேதி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே, இந்த வழியாக இயக்கப்படும் ரயில்கள் நவ.20 முதல் நவ.23 வரை பிற்பகல் 1.30 மணி முதல் மாலை 4.10 வரை சென்னை கடற்கரை இரயில் நிலையத்திலிருந்து செங்கல்பட்டு செல்லும் இரயில்கள் சிங்கப்பெருமாள் கோயில் வரை மட்டுமே இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்திருக்கிறது.

Read more ; உங்கள் வாகனத்தின் இன்சூரன்ஸ் தொலைந்து விட்டதா? டூப்ளிகேட் இன்சூரன்ஸ் காப்பி எப்படி பெறுவது..? ஈஸி டிப்ஸ் இதோ..

Tags :
Chennaisouthern railway
Advertisement
Next Article