பெற்றோர்களே கவனம்!. உங்க குழந்தைகள் அதிக வெயிட் போடுகிறார்களா?. சுவாசிப்பது முதல் இதய நோய் வரை ஆபத்து அபாயம்!
Childrens Gain Weight: இன்றைய காலகட்டத்தில் குழந்தைகளிடையே உடல் பருமன் அதிகரிப்பது என்பது பெரும் சவாலாக மாறியுள்ளது. 2019-ம் ஆண்டில் 5 வயதுக்குட்பட்ட 38.2 மில்லியன் குழந்தைகள் அதிக எடை அல்லது பருமனாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது குழந்தைகளின் உடல் எடை அதிகரிக்க காரணம் அவர்கள் உட்கொள்ளும் கலோரியைவிட குறைவான கலோரிகளை செலவிடக்கூடிய செயல்பாடுகளில் மட்டுமே ஈடுபடுவதாகும்.
எனவே குழந்தைகளுக்கு சாப்பாடு பரிமாறும் போது தட்டு நிறைய எல்லாவற்றையும் வைத்து கட்டாயமாக சாப்பிட வேண்டும் என்று சொல்லக்கூடாது. அதற்கு மாற்றாக அவர்களுக்கு பிடிக்காத அல்லது அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு கூட சத்துக்கள் நிறைந்த உணவுகளை வித்தியாசமாக அவர்கள் சாப்பிடும் விதத்தில் செய்து கொடுக்கலாம். மேலும் சத்தான சாப்பாடு என்ன என்பதனையும் அவர்களுக்கு விளக்கி கூறலாம். துரித உணவுகளால் ஏற்படும் ஆபத்துகள் குறித்தும் விளக்கி கூறலாம்.
உதாரணத்துக்கு கீரைகளை குழந்தைகள் சாப்பிடமாட்டார்கள். கீரையை வடை அல்லது ஸ்டஃப்டு பரோட்டாவாக செய்து கொடுக்கும் போது குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். ஃப்ரைடு ரைஸ் குழந்தைகளுக்கு பிடித்தமான மற்றொரு உணவாகும். எனவே வீட்டில் ஃப்ரைடு ரைஸ் செய்து கொடுக்கும் போது பொடியாக நறுக்கிய விதவிதமான காய்கறிகள், பன்னீர், கொண்டை கடலை போன்றவற்றை கலந்து கொடுக்கலாம்.
எடை அதிகரிக்க காரணம்: கொழுப்பு மற்றும் சர்க்கரை அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்ளுதல். வீட்டிற்குள்ளேயே அமர்ந்துகொண்டு நீண்டநேரம் டிவி பார்ப்பது, வீடியோ கேம் விளையாடுவது. சத்தாண உணவிற்கு பதிலாக சோடாக்கள், ஐஸ்கிரீம், பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுகள், நொறுக்கித்தீனி வகைகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், சாக்லெட் போன்றவற்றை அதிகமாக உட்கொள்ளுதல். உடல் செயல்பாடுகள் அதிகம் உள்ள விளையாட்டுகளை தவிர்ப்பது, ஆகியவற்றால் குழந்தைகள் எடை அதிகரிக்கிறது.
உடலில் ஏற்படும் பல்வேறு வகையான நோய்களுக்கு உடல் பருமன் முக்கிய காரணமாக உள்ளது.நீரிழிவு, கீழ்வாதம், எண்டோம்ண்ட்ரியல், மார்பகம், கருப்பை, புரோஸ்டெட், கல்லீரல், பித்தப்பை, சிறுநீரகம் மற்றும் பெருங்குடல் ஆகியவற்றில் புற்றுநோய், இருதய பாதிப்பு போன்ற நோய்கள் ஏற்படுவதாக அதிகாரப்பூர்வ ஆய்வுகள் மூலமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் சுவாசிப்பதில் சிக்கல், உயர் ரத்தம் அழுத்தம், இன்சுலின் எதிர்ப்பு மற்றும் உளவியலான பிரச்சனைகளுக்கும் குழந்தைகள் காரணமாகின்றனர்.