முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

தமிழகமே...! கட்டாய கல்விக்கு விண்ணப்பித்த பெற்றோர்கள் கவனத்திற்கு...!

07:04 AM May 28, 2024 IST | Vignesh
Advertisement

கட்டாயக் கல்வி திட்டம் 25% ஒதுக்கீட்டின் கீழ் பதிவு செய்த பெற்றோர்கள் தங்கள் பதிவு செய்த பள்ளிகளில் இன்று நடைபெறும் குலுக்கலில் கலந்து கொள்ளலாம்.

Advertisement

கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியாா் பள்ளிகளில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவா்கள் இலவசமாக பயில 25 சதவீத இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. அவ்வாறு மாநிலம் முழுவதும் 7,283 தனியாா் பள்ளிகளில் சுமாா் 85,000 இலவச ஒதுக்கீட்டு இடங்கள் உள்ளன. இந்தத் திட்டத்தில் எல்.கே.ஜி. அல்லது ஒன்றாம் வகுப்பில் சேருபவா்கள் 8-ம் வகுப்பு வரை கட்டணம் செலுத்தாமல் இலவசமாக படிக்கலாம்.

வரும் கல்வியாண்டுக்கான (2023-24) இலவச மாணவர் சேர்க்கை இணையவழி விண்ணப்பப்பதிவு கடந்த ஏப்ரல் 22-ம் தேதி தொடங்கி கடந்த 20-ம் தேதி நிறைவடைந்தது. இந்த ஆண்டு 1.30 லட்சம் பெற்றோர் விண்ணப்பப்பதிவு செய்துள்ளனர். பள்ளியில் நிர்ணயித்த இடங்களைவிட அதிக விண்ணப்பங்கள் வந்தால் இன்று குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இந்த திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட மாணவா்களின் பெயர் உள்ளிட்ட விவரம் நாளை இணையதளத்தில் வெளியிடப்படும். சேர்க்கைக்கு தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் பெற்றோருக்கு குறுஞ்செய்தி வாயிலாகவும் தகவல் அனுப்பப்படும். இதுதொடர்பான கூடுதல் விவரங்களை rte.tnschools.gov.in என்ற இணையதளத்தையோ அல்லது 14417 என்ற உதவி மைய எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

Tags :
free educationprivate schoolRTEschool
Advertisement
Next Article