வாகன ஓட்டிகள் கவனத்திற்கு..!! அதிரடியாக வரப்போகும் புதிய விதிமுறைகள்..!! செலவு வைக்கப்போகும் மத்திய அரசு..!!
இனி முறையான இன்சூரன்ஸ் இருந்தால் மட்டுமே பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல், டீசல் பெற முடியும் என்ற புதிய விதிகளை மத்திய அரசு கொண்டுவர உள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியாவில் ஏற்கனவே Third Party Insurance என்பது கட்டாயமாக இருக்கிறது. வாகனச் சட்டத்தின் கீழ் இதில் கடுமையான தண்டனைகள் ஏற்கனவே இருக்கும் நிலையிலும், பலரும் Third Party Insurance எடுப்பதில்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாக, இன்சூரன்ஸ் தொடர்பான விதிகளை விரிவுபடுத்த சாலை போக்குவரத்துத் துறை அமைச்சகத்தை மத்திய நிதியமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது. அந்த வகையில், பெட்ரோல் - டீசல் வாங்கவும், ஃபாஸ்ட் டேக் ரீசார்ஜ்களுக்கும் கூட இன்சூரன்ஸை கட்டாயமாக்க மத்திய அரசு திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
Third Party Insurance ஏன் அவசியம்..?
இந்தியாவில் மோட்டார் வாகனச் சட்டம், 1988இன் கீழ், அனைத்து வாகனங்களுக்கும் 3ஆம் தரப்பு இன்சூரன்ஸ் கட்டாயமாகும். அப்படி இல்லையென்றால், அபராதம் மற்றும் 3 மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்படும். கடந்த 2024 தகவலின்படி, நாடு முழுவதும் 40 கோடி வாகனங்கள் உள்ளன. கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில், ”50% வாகனங்களுக்கு மட்டுமே இன்சூரன்ஸ் உள்ளது. எனவே, டேட்டாவை ஒருங்கிணைத்து எலெக்ட்ரானிக் சலான்களை முறைப்படுத்துவது குறித்தும் வழிகளைக் கண்டறிய வேண்டும். வாகனப் பதிவுகள் மற்றும் காப்பீடு கவரேஜ் பற்றிய தகவல்களை அனைத்து மாநிலங்களும் முறையாகத் தெரிவிக்க வேண்டும். இதன் மூலம் காப்பீடு எடுக்காத வாகனங்கள் மீது நடவடிக்கைகளை எடுக்க முடியும்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து வல்லுநர்கள் கூறுகையில், "ஐரோப்பாவில் பல நாடுகளில் இதுபோன்ற வசதி உள்ளது. இதுபோல அனைத்து சேவைகளையும் ஒருங்கிணைப்பதன் மூலம் அனைத்து வாகனங்களுக்கும் இன்சூரன்ஸ் எடுப்பதைக் கட்டாயமாக்க முடியும். இது செலவு போலத் தெரிந்தாலும், விபத்து ஏற்படும் போது நமக்கு மிகப் பெரிய உதவியாகவே இருக்கும்” என்று தெரிவித்துள்ளனர்.