பண்டிகை நாளில் தங்கம் வாங்குவோர் கவனத்திற்கு...! இந்திய தர நிர்ணய ஆணையம் எச்சரிக்கை
தந்தேராஸ் பண்டிகை நாளில் தங்கம், வெள்ளி வாங்கும் போது கவனத்துடன் கூடிய அணுகுமுறையைக் கடைப்பிடிக்குமாறு இந்திய தர நிர்ணய ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
பாரம்பரியமாக, தந்தேராஸ் தினம், தங்கம் வாங்குவதைக் குறிக்கிறது. இதில் ஹால்மார்க் செய்யப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்களின் முக்கியத்துவத்தை ஊக்குவிப்பதன் மூலம், மாற்றத்தை ஏற்படுத்துவதில் பிஐஎஸ் முக்கிய பங்காற்றுகிறது. தங்க நகைகளில் ஹால்மார்க்கிங் 3 அடையாளங்களைக் கொண்டுள்ளது. ஹால்மார்க்கிங் பிரத்யேக ஐடி என்பது ஒவ்வொரு தங்க நகையிலும் குறிக்கப்பட்ட தனித்துவமான 6 இலக்க எண்ணெழுத்து குறியீடாகும்.
இது குறித்து பிஐஎஸ் தலைமை இயக்குநர் திரு பிரமோத் குமார் திவாரி கூறுகையில், தந்தேராஸ் நாளிலும் பிற நாட்களிலும் ஹால்மார்க் தங்கத்தை வாங்குவதை வலியுறுத்தி, நுகர்வோரின் தங்க முதலீடுகளை பாதுகாப்பதில் பிஐஎஸ் உறுதியாக உள்ளது என்றார். பிஐஎஸ் கேர் செயலி மூலம், நுகர்வோர் தங்களுடைய நகைகளின் நம்பகத்தன்மையை உறுதிசெய்ய முடியும் என இந்திய தர நிர்ணய ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.