For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

நீரிழிவு நோயாளிகளே!. இனி கால் இழப்பு கவலை வேண்டாம்!. தமிழக அரசின் புதிய திட்டம்!.

Attention diabetics! Arrangement to prevent leg losses! Podiatry Center in Government Hospitals! Tamil Nadu Government Ordinance! Diabetic patients
08:41 AM Oct 29, 2024 IST | Kokila
நீரிழிவு நோயாளிகளே   இனி கால் இழப்பு கவலை வேண்டாம்   தமிழக அரசின் புதிய திட்டம்
Advertisement

Diabetics: நீரிழிவு நோயால் கால் இழப்புகளை தடுக்கும் வகையில், “பாதம் பாதுகாப்போம்” திட்டத்தின் கீழ் அரசு மருத்துவமனைகளில் பாத மருத்துவ மையங்கள் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

Advertisement

இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட அரசாணையில் குறிப்பிட்டுள்ளதாவது, தமிழ்நாடு அரசின் முன்னோடி திட்டமாகிய ‘மக்களைத் தேடி மருத்துவம்’ நோய்களை தடுப்பதிலும் சிகிச்சை அளிப்பதிலும் முக்கிய பங்காற்றுகிறது. மாநிலத்தின் முதன்மையான மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் இத்திட்டம் கட்டமைக்கப்பட்டு ஒருங்கிணைந்த பாத மருத்துவ சேவைகளை 36 அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் மூலமாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. நாட்டிலேயே இதுபோன்ற முன்னெடுப்பை அரசு மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும். 10 கோடிக்கும் அதிகமான நோயாளிகள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு உள்ள இந்தியாவில் 25 சதவிகிதத்தினர் பாத பாதிப்புகளால் அவதியுறுவதும், இவர்களில் 85 சதவிகிதத்தினர் கால்களை இழக்க நேரிடுவதும் ஒரு தேசிய பேரிடர் ஆகும்.

தமிழ்நாட்டில் 80 லட்சம் மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு உள்ளார்கள். நீரிழிவு பாத பாதிப்புகள் ஆரம்ப நிலையில் கண்டறியப்படாவிடில் ஆபத்தான பின்விளைவுகளும், கிருமி தொற்று மற்றும் கால்களை இழக்கும் அபாயமும் நேரிடுகிறது. 85 சதவிகித நீரிழிவு தொடர்பான கால் அகற்றல்கள் காலத்தே கண்டறியப்பட்ட நோய் அறிகுறிகள் மற்றும் இடையீட்டுகளின் மூலம் முற்றிலும் தவிர்க்கக்கூடியவை ஆகும். பெருகி வரும் இப்பிரச்சினையின் தீவிர தன்மையை கண்டறிந்து இதை களைவதற்கான முன்னெடுப்பாக ‘பாதம் பாதுகாப்போம் திட்டம்’ தமிழ்நாடு அரசால் அறிமுகப்படுத்தப்படுகிறது. இதன்மூலம் 80 லட்சம் நீரிழிவு நோயாளிகள் பாத பரிசோதனைக்கு உட்படுத்த இலக்கு நிர்ணயித்து திட்டமிடப்பட்டுள்ளது.

நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் பாத உணர்விழப்பு மற்றும் இரத்த நாள அடைப்புகளை கண்டறிந்து மருத்துவ நெறிமுறைகள் அடிப்படையிலான ஆரம்ப நிலை இடையீட்டுகளை மேற்கொண்டு கால் இழப்புகளை தடுத்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு இத்திட்டத்திற்கென ரூ.26.62 கோடி நிதி ஒதுக்கீடு செய்து 2336 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 299 அரசு மருத்துவமனைகள் மற்றும் 36 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் பாத பாதிப்பு கண்டறிதல் மையங்களை நிறுவ உள்ளது.

மேலும் 100 அரசு மருத்துவமனைகள், 21 அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் நிறுவப்படும் பாத மருத்துவ மையங்கள் மற்றும் 15 மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் நீரிழிவு பாத அறுவை சிகிச்சைகள் மேற்கொள்வதற்கான வசதிகளை நிறுவுவதன் மூலமாகவும் இத்திட்டம் பாத பராமரிப்பு, கால் புண் தவிர்த்தல், கால் புண் மருத்துவம், நீரிழிவு பாத அறுவை சிகிச்சைகள் மற்றும் புனர்வாழ்வு அம்சங்களையும் ஒருங்கிணைக்கின்றது.

பாத மருத்துவ மையங்களை அரசு மருத்துவத்தின் முக்கியமான சேவைகளாக உருவகப்படுத்துவதன் மூலம் மிக எளிய தரப்பினரையும் பாத மருத்துவ சேவைகள் சென்றடைவதை உறுதி செய்வதோடு, எந்த ஒரு நீரிழிவு நோயாளியும் பாத மருத்துவ தீவிர கவன சிகிச்சையின்றி தவிக்கும் நிலை இருக்கக்கூடாது என்பதையும் அரசு உறுதிசெய்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Readmore: சென்னை மெட்ரோ ரயில் ஊழியர்களுக்கு ஜாக்பாட்!. முதன்முறையாக தீபாவளி போனஸ் அறிவிப்பு!.

Tags :
Advertisement