முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

பழனி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு..!! விஜயதசமி நாளில் சாமி தரிசனத்திற்கு புதிய கட்டுப்பாடு..!!

New restrictions have been put in place for devotees coming to Palani to have darshan of Swamy on Vijayadashami on October 12.
04:18 PM Oct 04, 2024 IST | Chella
Advertisement

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலுக்கு பண்டிகை நாட்களிலும், விடுமுறை நாட்களிலும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் அதிக அளவில் வருகை தருவது வழக்கம். இந்நிலையில், நவராத்திரி விழா தொடங்கியுள்ள நிலையில், அக்டோபர் 12ஆம் தேதி விஜயதசமி தினத்தன்று பழனி வரும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

Advertisement

அந்த வகையில், நடப்பு ஆண்டில் நவராத்திரி விழாவையொட்டி காப்புக் கட்டும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அக்டோபர் 11ஆம் தேதி ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜையும், 12ஆம் தேதி விஜயதசமி அன்று அம்பு வில் போடுதல் நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளன. விழாவையொட்டி, பெரியநாயகியம்மன் கோயிலில் சிறப்பு அபிஷேக பூஜை, அலங்காரம், ஆன்மிக சொற்பொழிவு, கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடைபெறுகின்றன.

நவராத்திரி விழாவை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு பழனி கோயில் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, நவராத்திரி விழாவையொட்டி அம்பு போடுதல் நிகழ்ச்சி அக்டோபர் 12 ஆம் தேதி விஜயதசமி தினத்தன்று நடைபெறுவதால் பக்தர்களுக்கு சுவாமி தரிசனம் செய்ய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. விஜயதசமி நாளில் காலை 11.30 மணி முதல் அனைத்து தரிசனக் கட்டண சீட்டுகள் வழங்குவது நிறுத்தப்படும்.

எனவே, மலைக் கோயிலின் படிப் பாதை, மின் இழுவை ரயில், ரோப் கார் என மூன்று வழிப் பாதைகளில் 11 மணி வரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். 11 மணிக்கு மேல் வரும் பக்தர்கள் மலைக் கோயிலுக்குச் செல்ல அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து, மறுநாள் முதல் வழக்கம்போல பூஜைகள் நடைபெறும். பக்தர்கள் எப்போதும் போல தரிசனத்துக்கு செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More : பணத்திற்காக தற்காலிகமாக திருமணம் செய்யும் இளம்பெண்கள்..!! ஒரே பெண்ணுடன் 20 நபர்கள்..!! பெத்தவங்களே இப்படி செய்யலாமா..?

Tags :
palanitempleபழனிமுருகன்
Advertisement
Next Article