முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

சென்னை மக்கள் கவனத்திற்கு... இன்று ஒரு நாள் போக்குவரத்து மாற்றம்... மெட்ரோ ரயிலில் இலவச பயணம்...!

Attention Chennai people... One-day traffic change today... Free travel on Metro train
05:25 AM Jan 05, 2025 IST | Vignesh
Advertisement

சென்னை மாரத்தான் ஓட்டம் இன்று நடைபெறுகிறது. மாரத்தான் பங்கேற்பாளர்கள் பயன்பெறும் வகையில், மெட்ரோ ரயில் சேவை இன்று அதிகாலை 3 மணிமுதல் 5 மணிவரை 15 நிமிட இடைவெளியில் இயக்கப்படும். அதன் பிறகு, ஞாயிற்றுக்கிழமை நேர அட்டவணையின்படி மெட்ரோ ரயில் சேவைகள் இயக்கப்படும். மாரத்தான் பங்கேற்பாளர்கள் ஸ்பான்சர் செய்யப்பட்ட மராத்தான் ‘க்யூஆர்’ குறியீடு பதியப்பட்ட சிறப்பு பயணச்சீட்டைப் பயன்படுத்தி இன்று மட்டும் தானியங்கி நுழைவு இயந்திரத்தில் ஸ்கேன் செய்து மெட்ரோ ரயிலில் பயணிக்கலாம்.

Advertisement

இதுகுறித்து சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: "சென்னை ரன்னர்ஸ் சார்பில் 4 பிரிவுகளாக (42.195 கி.மீ, 32.186 கி.மீ, 21.097 கி.மீ, மற்றும் 10 கி.மீ என பிரெஷ் ஒர்க்ஸ் சென்னை மாரத்தான் ஓட்டம் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு, இன்று காலை 4 மணி முதல் அதாவது நேப்பியர் பாலத்தில் இருந்து இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் வரை 42.195 கி.மீ, ஈ.சி.ஆர், நேப்பியர் பாலத்தில் இருந்து இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் வரை 32.186 கி.மீ, எலியட்ஸ் கடற்கரையில் இருந்து இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் வரை 21.097 கி.மீ, மற்றும் நேப்பியர் பாலத்திலிருந்து சிவானந்தா சாலை வரை 10 கி.மீ வரை நடைபெற உள்ளது.

சென்னை பெருநகர போக்குவரத்துக் காவல் துறையினரால் அதிகாலை 3 மணி முதல் காலை 8 மணி வரை பின்வருமாறு போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. காமராஜர் சாலையில் போர் நினைவு சின்னத்திலிருந்து காந்தி சிலை வரை இருபுறமும் வாகனங்கள் அனுமதிக்கப்படாது. அடையார் மார்க்கத்தில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் திரு.வி.க பாலம், டாக்டர் டி.ஜி.எஸ் தினகரன் சாலை, சாந்தோ ஹை ரோடு, காமராஜர் சாலை மற்றும் காந்தி சிலை வரை வழக்கம் போல் எந்தவித மாற்றமும் இல்லாமல் செல்லலாம்.

போர் நினைவிடத்தில் இருந்து திரு.வி.க பாலம் வரை வாகனங்கள் அனுமதிக்கப்படாது. மேலும், வாகனங்கள் கொடிமரச் சாலை வழியாக திருப்பிவிடப்பட்டு வாலாஜா பாயிண்ட் அண்ணா சாலை வழியாக தங்களது இலக்கை சென்றடையலாம். ஆர்.கே. சாலையில் இருந்து காந்தி சிலை நோக்கி வரும் வாகனங்கள் வி.எம் தெரு சந்திப்பில் திருப்பி விடப்படும். அவ்வாகனங்கள் ராயப்பேட்டை ஹை ரோடு, லஸ் கார்னர், ஆர்.கே.மட் சாலை வழியாக தங்களது இலக்கை சென்றடையலாம்.

LB சாலை x SP சாலை சந்திப்பிலிருந்து வரும் வாகனங்கள் பெசன்ட் அவென்யூ சாலையை நோக்கி அனுமதிக்கப்பட மாட்டாது. அவ்வாகனங்கள் LB சாலை, சாஸ்திரி நகர் வழியாக திருவான்மியூர் சிக்னல் வழியாக தங்களது இலக்கை சென்றடையலாம். காந்தி மண்டபத்தில் இருந்து வரும் வாகனங்கள் உத்தமர் காந்தி சாலை வழியாக அனுமதிக்கப்பட மாட்டாது. அவ்வாகனங்கள் LB சாலை, சாஸ்திரி நகர், திருவான்மியூர் சிக்னல் வழியாகத் தங்களது இலக்கை சென்றடையலாம்.

பெசன்ட் நகர் 7வது அவென்யூவில் இருந்து வரும் வாகனங்கள் எலியட்ஸ் பீச் நோக்கி அனுமதிக்கப்படாமல் எம்.ஜி சாலை நோக்கி திருப்பி விடப்படும். MTC பேருந்துகள் மட்டும் பெசன்ட் நகர் டெப்போவிற்கு அனுமதிக்கப்படும். பெசன்ட் நகர் அவென்யூ ML பார்க் நோக்கி அனுமதிக்கப்பட மாட்டாது. பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறைக்கு ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

மாரத்தான் போட்டியில் பங்கேற்கும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சென்னை மெட்ரோ ரயில் சார்பில் அதிகாலை முதலே ரயில்கள் குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் இயக்கப்படவுள்ளன. சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், Fresh Works Chennai Marathon உடன் இணைந்து இன்று அதிகாலை 3.00 மணி முதல் 5.00 மணி வரை 15 நிமிட இடைவெளியில் இயக்கப்படும். அதன் பிறகு ஞாயிற்றுக்கிழமை நேர அட்டவணையின்படி மெட்ரோ ரெயில் சேவைகள் இயக்கப்படும் என அறிவித்துள்ளது. மாரத்தான் பங்கேற்பாளர்கள் ஸ்பான்சர் செய்யப்பட்ட மராத்தான் QR குறியீடு பதியப்பட்ட சிறப்பு பயணசீட்டை பயன்படுத்தி ஜன. 05 அன்று மட்டும் தானியங்கி நுழைவு இயந்திரத்தில் ஸ்கேன் செய்து மெட்ரோவில் பயணிக்கலாம். மேலும் வாகன நிறுத்துமிடத்தில் இந்த QR / Bib குறியீட்டை பயன்படுத்தி பங்கேற்பாளர்கள் இன்று மட்டும் தங்களது வாகனங்களை இலவசமாக நிறுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Marathonmetro trainTamilnadutrafficசென்னைதமிழ்நாடு
Advertisement
Next Article