பிஎம் கிசான் திட்டம்..!! நாளை வங்கிக் கணக்கிற்கு வருகிறது ரூ.2,000..!! விவசாயிகள் செம ஹேப்பி..!!
பிஎம் கிசான் பயனாளிகள் 18-வது தவணைத் தொகையினை பெறுவதற்கு e-KYC எனும் ஆதார் எண் உறுதி செய்ய வேண்டும் என்று உறுதியாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் "பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி" திட்டமானது பிப்ரவரி 2019ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தபட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் விவசாய நிலம் வைத்திருக்கும் விவசாயக் குடும்பங்களுக்கு ஆண்டிற்கு ரூ.6,000 மூன்று தவணைகளில் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடிப் பணப்பரிமாற்றம் மூலமாக மத்திய அரசால் வழங்கப்பட்டு வருகிறது.
தற்போதைய நிலவரப்படி, நாடு முழுவதும் 11 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு ரூ.2.61 லட்சம் கோடிக்கு மேல் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் மூலம் 3 கோடிக்கும் அதிகமான பெண் பயனாளிகள் பயனடைந்துள்ளனர். நடப்பாண்டில் 18-வது தவணையைப் பெற பி.எம்.கிசான் இணையதளத்தில் தங்களது ஆதாரை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவ்வாறு உறுதி செய்த பயனாளிகளுக்கு மட்டுமே தவணை வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், பிஎம் கிசானின் 18-வது தவணையை, பிரதமர் மோடி நாளை விடுவிக்க உள்ளதாக PM kisan இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பதிவு செய்த விவசாயிகளுக்கு eKYC கட்டாயம். OTP அடிப்படையிலான eKYC PMKISAN போர்ட்டலில் கிடைக்கிறது அல்லது பயோமெட்ரிக் அடிப்படையிலான eKYC க்கு அருகிலுள்ள CSC மையங்களைத் தொடர்புகொள்ளலாம்.
Read More : பெரும் சோகம்..!! ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து..!! 100-ஐ தாண்டும் பலி எண்ணிக்கை..!!