அனைத்து ரேஷன் அட்டைதாரர்களின் கவனத்திற்கு..!! வெளியானது அதிரடி அறிவிப்பு..!! உடனே இதை பண்ணுங்க..!!
நாடு முழுவதும் உள்ள மக்களின் வாழ்வாதாரத்துக்காக, ரேஷன் கடைகள் மூலமாக, மலிவு விலையில் அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மத்திய, மாநில அரசுகள் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு, கொரோனா பரவலின்போது புலம்பெயர்ந்து வந்த தொழிலாளர்களுக்காகவே, கரீப் கல்யாண் அன்ன யோஜனா என்ற திட்டத்தையும் மத்திய அரசு அறிவித்தது.
அதன்படி, இலவசமாக உணவுப் பொருட்கள் 2020ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகின்றன. இதனால், கோடிக்கணக்கான குடும்பங்களும் பயன் பெற்று வருகிறார்கள். ஆனால், நிறைய பேர் ரேஷன் வாங்காமல் இருக்கிறார்களாம். சிலர் தவிர்க்க முடியாத காரணத்தால் வாங்க முடியாமல் இருக்கலாம் என்றாலும், தொடர்ந்து ரேஷன் பொருட்களை முன்வந்து வாங்காமல் விட்டுவிடுகிறார்களாம். ரேஷன் கார்டுகளை பெற்றிருந்தும்கூட, அதனை முழுமையாக பயன்படுத்துவதில்லை என்று புகார் எழுந்துள்ளது.
இந்நிலையில், ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கு இத்திட்டத்தின் பலன் கிடைப்பதில்லை என்பதால், அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் உணவு வழங்கல் துறை புதிய விதிமுறையை வகுத்துள்ளது. அதன்படி, அனைத்து ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களும் KYC செய்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் ரேஷன் கார்டில் அவர்களுக்கு கிடைத்து வரும் பலன்கள் நின்றுவிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கால அவகாசம் முடிவதற்குள், KYC சரிபார்ப்பை முடிக்காவிட்டால், ரேஷன் பொருட்களை அவர்களால் பெற முடியாது. ரேஷன் கார்டில் பலன் பெற தகுதியில்லாத ஏராளமானோர் உள்ளதால்தான், இந்த நடைமுறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, ஆண்டு வருமானம் 1.20 லட்சம் உள்ளவர்கள், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளோர் பட்டியலில் இருக்கக்கூடாது என்ற விதிமுறை உள்ளது. ஆனால், அரசின் பார்வையில் பிபிஎல் கார்டுதாரர்களுக்கான உதவிகளை உணவுத்துறை குறைத்துள்ளது. போலியான ஆவணங்களைக் கொண்டு ரேஷன் கார்டு வாங்கியவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுத்திருக்கும், இந்த அதிரடியால் முறைகேடுகள் ஒழிந்து, ஏழை எளிய மக்கள் முழுமையாக பயன்பெற முடியும் என்றும் நம்பப்படுகிறது.
Read More : ’நீங்கள் சாப்பிடும் உணவுகளால் உங்கள் பேரப்பிள்ளைகளுக்கும் ஆபத்து’..!! வெளியான அதிர்ச்சி ஆய்வு முடிவுகள்..!!