இஸ்ரேலுக்கு 48 மணிநேரம் கெடு விதித்த ஈரான்!... ஆசிய நாடுகளிடையே அதிகரிக்கும் போர் பதற்றம்!
Iran: இஸ்ரேல் மீது ஈரான் அடுத்த 48 மணிநேரத்திற்குள் தாக்குதல் நடத்தபோவதாக செய்திகள் வெளியாகியுள்ளதையடுத்து ஆசிய நாடுகளிடையே போர பதற்றம் நிலவிவருகிறது.
இஸ்ரேல் - ஹமாஸ் போருக்கு முடிவே இல்லை. இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பு இடையே கடந்தாண்டு அக்டோபர் மாதம் 2-வது வாரத்தில் தொடங்கிய இந்த தாக்குதல் இன்றும் நீடித்துக் கொண்டு வருகிறது. இஸ்ரேலுக்கு நிதி மற்றும் ஆயுத உதவி செய்துவரும் அமெரிக்காவே போர் நிறுத்தம் வேண்டும் எனக் கூறியுள்ளது.
ஆனால், அதைப் பற்றி கவலைபடாமல் தொடர்ந்து இஸ்ரேல் போர் புரிந்து வருகிறது. இதனால், பலி எண்ணிக்கை 20 ஆயிரத்தையும் தாண்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. அதேநேரத்தில், போர் நிறுத்தம் தொடர்பாக இரு நாடுகளும் பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டு வருகின்றன. ஆனாலும், இதுவரை சுமுக முடிவு எட்டப்படவில்லை.
இஸ்ரேலின் அண்டை நாடுகளில் ஒன்றான சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் உள்ள ஈரான் தூதரக கட்டடத்தின் மீது இஸ்ரேல் சமீபத்தில் (ஏப்ரல் 1) தாக்குதல் நடத்தியதாகவும் அதில் முக்கிய அதிகாரிகள் என 13 பேர் கொல்லப்பட்டதாக ஈரான் ராணுவம் தெரிவித்திருந்தது. இதில் மூத்த அதிகாரி ஒருவரும் கொல்லப்பட்டிருந்தார்.
”பிராந்தியத்தில் எது நடந்தாலும் அதற்கு சிரியாதான் பொறுப்பேற்க வேண்டும் எனவும் மேலும் ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பு அவர்களின் தாக்குதல் நிலைகளை சிரியாவில் நிறுவுவதற்கு அனுமதிக்கக் கூடாது. இவை ஈரான் ராணுவம் பயிற்சியளிப்பதாகக் கூறப்படும் ஆயுதக் குழுக்களை அழிக்கும் நோக்குடன் நடத்தப்பட்டவை” எனவும் இஸ்ரேல் தெரிவித்திருந்தது.
இதற்கிடையே, இஸ்ரேல் மீது அடுத்த 48 மணி நேரத்திற்குள் தாக்குதல் நடத்த ஈரான் தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து, மத்திய கிழக்கு ஆசிய நாடுகளில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
முன்னதாக ஈரான் ராணும் தயார் நிலையில் உள்ளதாகவும் ,தாக்குதல் துவங்கும் என கூறப்படுவதால், மறு அறிவிப்புவரை இந்தியர்கள் இஸ்ரேல், ஈரான் சுற்றுலா செல்வதை தவிர்க்குமாறு இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் அறிவுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Readmore: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இன்று முதல் தொடர் விடுமுறை..!! மீண்டும் எப்போது தெரியுமா..?