For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

இந்தியப் பெருங்கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி...! தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு மழை

Atmospheric low pressure area in the Indian Ocean region...! Rain in Tamil Nadu for the next 6 days
06:16 AM Nov 18, 2024 IST | Vignesh
இந்தியப் பெருங்கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி     தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு மழை
Advertisement

இந்தியப் பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

இது குறித்து வானிலை மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இன்று இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளை புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 20 முதல் 23-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Tags :
Advertisement