For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Alert...! வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி... 55 கி.மீ வேகத்தில் பலமான காற்று...!

Atmospheric downward circulation in the Bay of Bengal regions
06:05 AM Sep 22, 2024 IST | Vignesh
alert     வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி    55 கி மீ வேகத்தில் பலமான காற்று
Advertisement

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்றும், நாளையும் ஒருசில இடங்களிலும், 24-ம் தேதி ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி,மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

Advertisement

மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் இன்று முதல் 25-ம் தேதி வரை மணிக்கு அதிகபட்சமாக 55 கிமீ வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தின் சில பகுதிகளில் நாளை தென்மேற்கு பருவமழை விலக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் மேற்கு வங்கத்தை ஒட்டி நாளை புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் கன மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளது.

Tags :
Advertisement