For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Atlee Next Movie : அல்லுஅர்ஜூன் கூட்டணி…! அட்லீ போட்ட டீல்…! ஆடிப்போன சன் பிக்சர்ஸ்….!

04:52 PM Apr 04, 2024 IST | Maha
atlee next movie   அல்லுஅர்ஜூன் கூட்டணி…  அட்லீ போட்ட டீல்…  ஆடிப்போன சன் பிக்சர்ஸ்…
Advertisement

அட்லீ அடுத்ததாக அல்லு அர்ஜூனுடன் கூட்டணி வைத்து ஒரு படம் இயக்கவுள்ளார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளதாகவும், அவர்களுடன் அட்லீ "டீல்" பேசியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

தமிழ் திரையுலகத்தில் வளர்ந்து வரும் இளம் இயக்குனர்களில் அட்லீயும் ஒருவர். இவர் தமிழ் மட்டுமின்றி தற்போது இந்திய திரையுலகில் வளம் வரும் இயக்குனராகவும் உள்ளார். அட்லீ முதன் முதலில் ராஜாராணி எனும் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். எமோஷன், காமெடி, காதல் என கமர்ஷியல் கலவையான ராஜா ராணி படத்தை கொடுத்து மாபெரும் வெற்றியை பெற்றார் அட்லி. இவர் இயக்குனர் சங்கரின் உதவி இயக்குனராக இருந்து, இயக்குனராக அறிமுகமானவர்.

இதன் பிறகு விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் என ஹாட்ரிக் வெற்றியை கொடுத்து விஜய்யின் பிரியமான இயக்குனராக மாறினார் அட்லி. இந்நிலையில் தமிழில் வெற்றிகரமான இயக்குனராக வலம் வந்த அட்லி பாலிவுட்டில் ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற திரைப்படத்தை இயக்கினார்.

கடந்தாண்டு வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலை பொறுத்தவரை மெகாஹிட் வெற்றியை பெற்றது. ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது ஜவான் திரைப்படம் . ஆயிரம் கோடி வசூலை ஈட்டிய முதல் தமிழ் இயக்குனர் என்ற பெருமையை அட்லீக்கு தேடி கொடுத்தது. இந்நிலையில் ஜவான் படத்தை தொடர்ந்து, அவர் தெலுங்கில் அல்லு அர்ஜுனை வைத்து பான் இந்தியா மூவியை இயக்க உள்ளார் . இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.

இப்படத்திற்காக அட்லிக்கு கிட்டத்தட்ட ஐம்பது கோடி வரை சம்பளமாக பேசப்பட்டதாக தெரிகின்றது. இதை தவிர்த்து இப்படம் 500 கோடிக்கு மேல் வசூலித்தால் லாபத்தில் ஒரு பங்கையும், அட்லி சன் பிக்சர்ஸிடம் கேட்டுள்ளாராம். முதலில் இதை கேட்டு ஆடிப்போன சன் பிக்சர்ஸ் பிறகு அட்லியின் டீலுக்கு ஓகே சொல்லிவிட்டார்களாம்.

Tags :
Advertisement