அடேங்கப்பா!. 2,600 லிட்டர் தாய்ப்பால் தானம்!. கின்னஸ் சாதனை படைத்த அமெரிக்கா பெண்!
Breast Milk: அமெரிக்காவில் 2,600 லிட்டர் தாய்ப்பால் தானம் அளித்து பெண் ஒருவர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்தவர் அலிசா ஓக்லெட்ரீ 36. கடந்த 2016ல் இவருக்கு முதல் ஆண் குழந்தை பிறந்துள்ளது. அப்போது, இவரிடம் நர்ஸ் ஒருவர் தாய்ப்பால் தானம் அளிக்கும்படி பரிந்துரை செய்துள்ளார். இதனை ஏற்று அவர் தாய்ப்பால் தானம் அளிக்க துவங்கினார். பிறகு அவருக்கு 3 குழந்தைகள் பிறந்த போதும் தாய்ப்பால் தானம் வழங்குவதை நிறுத்தவில்லை. தனது குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுத்த போதும் மற்ற குழந்தைகளுக்கும் தானம் வழங்கி அவர்களை காப்பாற்றி வந்துள்ளார்.
கடந்த 2014 ம் ஆண்டு 1,569.79 லிட்டர் தாய்ப்பால் வழங்கி கின்னஸ் சாதனை படைத்து இருந்தார். இருப்பினும் அதோடு நிற்காமல் தொடர்ந்து தாய்ப்பால் தானம் வழங்கிய அவர், தற்போது வரை 2,656.58 லிட்டர் தாய்ப்பால் தானம் வழங்கி தனது முந்தைய சாதனையை முறியடித்துள்ளார்.
வடக்கு டெக்சாசின் தாய்ப்பால் வங்கி கணக்குப்படி ஒரு லிட்டர் தாய்ப்பால் மூலம் 11 பச்சிளம் குழந்தைகள் பசியாற முடியும். இந்த கணக்கின்படி அடிப்படையில் ஒலீசா அளித்த நன்கொடை மூலம் 3,50,000 குழந்தைகளுக்கு உதவியாக இருந்தது என கணிக்கப்பட்டு உள்ளது.
Readmore: அரசு துறைகளில் அடுத்த 2 ஆண்டுகளில் 5,000 மின்சார கார்கள்…! மத்திய அரசு திட்டம்