முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

அடேங்கப்பா..!! 15 கோடி வருடங்களுக்கு முன் காணாமல்போன கண்டம் கண்டுபிடிப்பு..!! இப்போ எங்க இருக்கு தெரியுமா..?

07:30 AM Nov 17, 2023 IST | 1newsnationuser6
Advertisement

ஆஸ்திரேலியா உடன் இருந்த பகுதி தான் ஆர்கோலாண்ட். இது கண்டமாக சுமார் 15.5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு தனியாகப் பிரிந்தது. அதன் பிறகு மாயமானது. இந்நிலையில், நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, தற்போது நெதர்லாந்தில் உள்ள உட்ரெக்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இதனை கண்டறிந்துள்ளனர். இந்த ஆர்கோலாண்ட் தென்கிழக்கு ஆசியாவின் கிழக்கு தீவுகளுக்கு அடியில் உள்ளதாக தெரிவிக்கின்றனர்.

Advertisement

இதுகுறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், ”இது ஆஸ்திரேலியாவின் வடக்கே சென்றிருக்கும் என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால், இப்போது அது தென்கிழக்கு ஆசியாவில் இருப்பதைக் கண்டறிந்துள்ளோம்" என்றனர். இந்தோனேசியா மற்றும் மியான்மரைச் சுற்றி பகுதிகளில் இந்த பண்டைய கண்டத்தின் பகுதிகள் இருப்பதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்.

இருப்பினும், முழுமையாக அந்த கண்டம் எங்கே இருக்கிறது என்பது உறுதியாகவில்லை. டெக்டோனிக் தகடுகளில் ஏற்பட்ட நகர்வு காரணமாக அது ஆஸ்திரேலியாவில் இருந்து பிரிந்துள்ளது. காலப்போக்கில் அது தென்கிழக்கு ஆசியா பகுதியில் சிதறியுள்ளது. இது வடக்கு நோக்கி நகர்ந்த பிறகு, அது துண்டுகளாகச் சிதறிய நிலையில், அதைச் சுற்றி பெருங்கடல்களும் உருவாகியிருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Tags :
ஆராய்ச்சியாளர்கள்ஆர்கோலாண்ட்ஆஸ்திரேலியா
Advertisement
Next Article