அடேங்கப்பா!. ஒரே நாளில் 8 பதக்கம்!. 100ஐ நெருங்கிய அமெரிக்கா!. சீனாவை பின்னுக்கு தள்ளி அசத்தல்!
Olympic Medals: பாரிஸ் ஒலிம்பிக்கில் 12ம் நாளான நேற்று ஒரே நாளில் 8 பதக்கங்களை குவித்த அமெரிக்கா 94 பதக்கங்களுடன் சீனாவை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளது.
பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. பதக்க வேட்டையில் அமெரிக்க, சீனா, ஆஸ்திரேலியா அணிகள் ஒவ்வொருநாளும் கடுமையாக ஈடுபட்டு வருகின்றன. இன்று 13ம் நாள் போட்டிகள் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தொடரில் இந்தியா இதுவரை மூன்று வெண்கல பதக்கம் மட்டுமே வாங்கி இருக்கிறது. ஆனால் பல விளையாட்டு பிரிவுகளில் நான்காவது இடத்தை பிடித்து பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்திருக்கிறது.
அந்தவகையில் குயின்சி ஹால் மற்றும் சாரா ஹில்டெப்ராண்ட் ஆகியோர் விளையாட்டுப் போட்டியின் 12வது நாளில் அமெரிக்க அணி தங்கப் பதக்கம் வென்றனர். கடந்த 11நாட்களாக முதலிடத்தை ஆதிக்கம் செலுத்தி வந்த சீனாவை 30 இடங்களுக்கு மேல் பின்னுக்கு தள்ளி அமெரிக்கா முதலிடத்தை பிடித்துள்ளது. அந்தவகையில் ஸ்ப்ரிண்டர் குயின்சி ஹால் , மல்யுத்த வீராங்கனை சாரா ஹில்டெப்ராண்ட் மற்றும் மகளிர் அணி பர்சூட் சைக்கிளிங் அணி ஆகியவை அமெரிக்கர்களின் தங்கப் பதக்கத்தை 27 ஆக உயர்த்தியநிலையில், சீனாவை விட இரண்டு தங்கப்பதக்கங்கள் முன்னிலை பெற்றன. 12ம் நாளான ஆகஸ்ட் 7ம் தேதி முடிவில், 27 தங்கம், 35 வெள்ளி, 32 வெண்கலம் என 94 பதக்கங்களுடன் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.
25 தங்கம், 23 வெள்ளி, 17 வெண்கலம் என மொத்தம் 65 பதக்கங்களுடன் சீனா இரண்டாவது இடத்திலும், ஆஸ்திரேலியா 18 தங்கம், 12 வெள்ளி, 11 வெண்கலம் என 41 பதக்கங்களுடன் 3 வது இடத்திலும், 13 தங்கம், 17 வெள்ளி, 21 வெண்கலம் என 51 பதக்கங்களுடன் பிரான்ஸ் 4வது இடத்திலும் உள்ளன. வினேஷ் போகத்தின் தகுதி நீக்கத்தால் தங்கப் பதக்க கனவு ஏமாற்றம் உள்ளிட்ட வீரர்களின் அடுத்தடுத்த தோல்விகளால் இந்தியா தொடர் பின்னடவை சந்தித்து வருகிறது.அந்தவகையில் மூன்றே வெண்கல பதக்கத்துடன் 67 இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
Readmore: குட் பை!. மல்யுத்தம் தன்னை வென்றுவிட்டது!. ஓய்வு அறிவித்து வினேஷ் போகத் உருக்கம்!